இரண்டெழுத்து மந்திரக்காரர்..
கவிதையில் கலை; தயங்காத ஈகை;
குணத்தில் நிலா; அன்பில் மழை;
உயர்வில் மலை; சிந்தனையில் ஒளி;
பேச்சில் தேன் என
இரண்டெழுத்து மந்திரவார்த்தைகளுக்குரிய
மாமனிதனின் பெயருக்கும் இரண்டெழுத்தே..
சொற்களால் சித்திரம் தீட்டும் கவிஞர்!
சின்னச் சின்ன வரிகளில்
சிந்திக்க வைக்கும் ஹைக்கூ படைப்பாளர்!
தன் ஹைக்கூ கவிதைகளால்
வாழ்வின் அழகை, அவலத்தை உணர்த்துபவர்!
இவரது கவிதைகள்
கல்லூரிப் பாடத்திட்டத்தில் இடம்பெறுவது
இவரது படைப்பாற்றலுக்குக் கிடைத்த பெருமை!
தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது
இவரது தமிழ்ப்பணிக்குக் கிடைத்த அங்கீகாரம்!
பல நூல்களின் ஆசிரியர்!
படைப்புலகில் தனித்துவம் கொண்டவர்!
எழுத்தில் ஆழம் கொண்டவர்;
எண்ணத்தில் உயரம் கொண்டவர்!
புகழ் உயர்ந்தாலும் பணிவு குறையாதவர்!
தன்னை மட்டும் முன்னிறுத்தாமல்
தன்னுடன் நட்புகளையும் அழைத்துச் செல்பவர்!
இவர் எழுத்தில் தமிழின் செழுமை;
இதயத்தில் அன்பின் மென்மை!
தேடிச்சென்று பாராட்டும் பண்பு
இது இவர் தனிச்சிறப்பு.
கருத்தியலில் மாறுபட்ட நபர்களையும்
நண்பராக்கிக்கொள்ளும் மாண்பு.
மனித உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கும் மனிதம்.
வேறுபாடுகளை வெறுக்கும் மனம்.
இறையன்புவின் இதயச் சிறையில் சிக்கியவரே!
பலரது மனங்களை அன்பால் ஆக்கிரமித்த இதயக் கள்வனே!
தங்கள் தமிழ்ப்பணி புதிய உயரங்களைத் தொடட்டும்!
உடல்நலமும் உள்ளநலமும் பெருகட்டும்!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
பிரியத்துடன்
ப. திருமலை நமது மண்வாசம் ஆசிரியர்


கருத்துகள்
கருத்துரையிடுக