வாழ்த்து .கவிஞர்.கா.சரஸ்வதிஉமாலெட்சுமி* *மதுரை

இரவி ஐயா அவர்களுக்கு நட்பின் கவி..... ஹ ஹைக்கூ என்னும் மூன்றடி உலகில் ஆயிரம் சிந்தனை விதைக்கும் ஆளுமையே! // வலைதள வானில் வலம் வரும் தமிழொளியே! // வார்த்தைகளால் இதயங்களை வெல்லும் கவிஞரே! // தமிழன்னையின் ஆளுமையில் தாங்கள் இருப்பதைக் கண்டு பூரிப்படைவதா? // அல்லது தங்களின் தமிழ்ப்புலமையால் என் தமிழன்னை மேலும் மெருகேறுகிறாள் என்று பரவசமடைவதா? // இலக்கிய உலகின் இலக்கணம் நீங்கள்! // இனிய தமிழின் இயங்கும் அடையாளம் நீங்கள்! // தமிழ் வெறும் உயிரும் மூச்சும் அல்ல; தமிழர்களாய் வாழும் பெருமிதத்தின் சான்று நீங்கள்! // சிற்றிலக்கியம் முதல் சிந்தனைப் பெருவெளிவரை, சீர்மிகு தமிழின் சிறப்புகளைப் பரப்புகின்றீர்! // மூன்றடிக் கவிதையில் முத்தான கருத்துரைத்து, மூவுலகும் வியக்கும் மொழிச்செல்வம் படைக்கின்றீர்! // பிரபஞ்சம் விரிந்தாலும் புகழுக்கு எல்லையில்லை,// பிறந்தநாள் மலர்ந்தாலும் புலமைக்கு ஓய்வில்லை!// எண்ணங்கள் விண்மீன்களாய் என்றும் ஒளிரட்டும்,// எழுத்துகள் காலங்கள் கடந்தும் நிலைக்கட்டும்!// இனிய பிறந்தநாளில் இதயமார்ந்த வாழ்த்துகள்!// இன்னும் பல்லாண்டு தமிழ்ப்பணி தொடரட்டும்!// கவிஞர் இரவி ஐயா அவர்களே, தங்கள் தமிழ்ப்பயணம் காலத்தின் எல்லைகளைக் கடந்து சிறக்கட்டும்!// வாழ்க கவிஞர் இரவி!// மேலும் வளர்க தமிழ்ப்பணி!// பல்லாண்டு வாழ்க தங்கள் தமிழ்த்தொண்டு! // *கவிஞர்.கா.சரஸ்வதிஉமாலெட்சுமி* *மதுரை

கருத்துகள்