மெல்ல நுழையும் வடமொழி வேண்டாம்! கவிஞர் இரா. இரவி

மெல்ல நுழையும் வடமொழி வேண்டாம்! கவிஞர் இரா. இரவி மெல்ல அல்ல விரைவாக நுழைகிறது முன்னின்று தடுக்காவிட்டால் தமிழை அழிக்கும்! அழகர்கோவில் வரவேற்பு வளையத்தில் ஆங்கிலத்தோடு அழகு தமிழோடு இந்தியும் எதற்கு? நெடுஞ்சாலை மைல்கற்களில் இந்தி எதற்கு? நம் தமிழகத்தில் இருமொழி கொள்கையே என்றும்! மும்மொழி என்பது மாணவர்களுக்கு பெரும்சுமை முன்மொழிந்துவிட்டது உச்சநீதிமன்றம் வேண்டாம் என்று ஒன்றிய அரசுப் பள்ளிகளில் மாணவர்களை மும்மொழி படிக்க கட்டாயப்படுத்தல் கூடாது! கட்டாயப்படுத்தினால் நீதிமன்ற அவமதிப்பாகும் கல்வியை விரும்பித்தான் கற்றிட வேண்டும்! ஆயுள்காப்பீட்டு கழகத்தின் விளம்பரத்தை மும்மொழியில் பண்பலை வானொலிகளில் செய்து பண விரையம்! தமிழ்நாட்டு பண்பலை வானொலிகளில் விளம்பரத்தை தமிழில் மட்டுமே செய்தால்தான் போய் சேரும்! புரியாத இந்தி மொழியில் விளம்பரம் செய்து நேயர்களின் எரிச்சலை வெறுப்பை அடையாதீர்கள்! உலகின் முதல்மொழியாம் தாய்மொழி தமிழும் உலகமொழியான ஆங்கிலமும் இருமொழி போதும் முன்றாவதாக வடமொழி இந்தியைப் புகுத்தும் முட்டாள்தனத்தை கைவிட்டு விடுங்கள்! மும்மொழிக் கொள்கை மூடர்கள் கொள்கை இருமொழிக் கொள்கையே இனிய கொள்கையாகும்!

கருத்துகள்