படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி

Praneetha Selvi எனக்கு பெரியாரையும் திராவிடத்தையும் அறிமுகம் செய்ததைப் போலவே, இன்று எங்கள் மகளுக்கும் அறிமுகம் செய்து வைத்திருக்கிறோம். திராவிடம் தந்த ஒரு பலனையும் நாங்கள் இது வரை பெற முயற்சிக்கவும் இல்லை, இனிப் பெறப்போவதும் இல்லை . அதற்காக நாங்கள் திராவிடத்தைக் கைவிடப் போவதுமில்லை. பெரியாரையும் திராவிடத்தையும் இறுதிவரை நேசிப்போம்; சுவாசிப்போம். ஏனென்றால் அது எங்களுக்குக் கிடைத்த லாபமல்ல, நாங்கள் ஏற்றுக்கொண்ட கொள்கை. அது எங்களின் கடமை! திராவிடம் எங்களுக்கு என்ன செய்தது என்று கணக்குப் பார்த்து பெரியாரை நேசிக்கவில்லை; பெரியார் எங்களுக்குக் கற்றுக்கொடுத்த கொள்கையை அடுத்த தலைமுறைக்கும் கடத்த வேண்டும் என்பதற்காகவே இன்று எங்கள் மகளுக்கும் திராவிடத்தையும் பெரியாரையும் அறிமுகம் செய்திருக்கிறோம்! ஆனால், திராவிட இயக்கத்தில் பல ஆண்டுகளாக இருந்து, அதன் மூலம் கிடைக்கும் சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள், ஏன் பெரியாரையும் திராவிடத்தையும் தங்கள் பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்யக்கூடத் தயங்குகிறார்கள்? கொள்கையால் கிடைக்கும் பலன்களை மட்டும் அனுபவித்துவிட்டு, அந்தக் கொள்கையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லத் தயங்குவது ஏன்? இந்தக் கேள்விதான் மனதை வலிக்கச் செய்கிறது

கருத்துகள்