கவிஞர் இரா.இரவி அவர்களின் மாண்புமிகு மனைவி நூலுக்கான மதிப்புரை ஆ. குமாரி லெட்சுமி வேளாண் அலுவலர் ( விருப்ப ஒய்வு )
ஹைக்கூ திலகம் கவிஞர் இரா.இரவி அவர்களின் மாண்புமிகு மனைவி
நூலுக்கான மதிப்புரை ஆ. குமாரி லெட்சுமி வேளாண் அலுவலர் ( விருப்ப ஒய்வு )
வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர் சென்னை - 600 017. பக்கங்கள் : 126, விலை : ரூ. 125 தொலைபேசி எண்கள் 044- 24342810. 24310769. மின்னஞ்சல்vanathipathippakam@gmail.com
மதுரையின் இலக்கிய அடையாளங்களில் ஒருவராகப் பேசப்படுகின்ற கவிஞர் ஹைக்கூ திலகம் இரா. இரவி அவர்களின் 39 ஆவது நூல் இது. ஹைக்கூ கவிதை மன்னனாய்,
புத்தூட்டம் தரும் புது கவிதை புனைபவராய், எழுச்சிக் கருத்துக்களைச் சொல்லி பட்டிமன்ற மேடைகளில் கலக்குபவராய்,இப்படி பல்வேறு பரிமாணங்களில் கவிஞர் ரவி பயணம் செய்வதற்கு அவருக்கு உறுதுணையாய், பின்புலமாய் இருந்த, அவரின் துணைவியார் கடந்த 14. 05.26 அன்று சாலை விபத்தில் காலமாகிவிட்டார். மனம் முழுக்க சோகம் நிரம்பியவராய் இருந்த இந்த கவிஞருக்கு இப்போதும், விழித்துக் கொள்ள உதவி இருப்பது அவர் மனைவிதான். ஆம்.. தன் மனைவி மேல் இருந்த அளப்பரிய அன்பினால்.... இந்த
கவிதை
ஷாஜஹான் கட்டியுள்ள தாஜ்மஹால் தான் மாண்புமிகு மனைவி என்னும் இந்த நூல்.
கவிஞர். இரவி அவர்களின் படைப்புகளில்
பொதுவாக எப்போதும் சமூகத்திற்கான ஏதாவது ஒரு படிப்பினை அவசியம் இருக்கும்.இந்த நூல் முழுக்க முழுக்க மனைவியை பாராட்டுவதாக அமைந்திருந்தாலும் கூட
மனைவி உயிரோடு இருக்கும்போதே பாராட்ட மறந்து விடாதீர்கள் என கணவர்களுக்கு அறிவுரை கூறுவதில் ஆகட்டும், விட்டுக் கொடுத்துப் போவதுதான் வாழ்க்கை என்பதை விளக்க " **ஊர்வன பரப்பன,* *எல்லாம்* *உண்பவன்** *நான். ஊறுகாய்* *மட்டுமே* *இவளுக்கு* .
*கடவுள் இல்லை* *என்பவன்* *நான்* *இவள்* *கல்கண்ட* *இடமெல்லாம்* *வணங்குபவள்* ....*இலக்கியத்தை* **விரும்பி* *கரும்பென* *ருசிப்பவன் நான்* *இலக்கியம்* *எனக்கு எதற்கு* *என்பவள் அவள்* என பல வேற்றுமைகளை வெளிப்படுத்தி " *வேற்றுமையில்* *ஒற்றுமை* *இந்தியா* *மட்டுமல்ல வஞ்சி* *அவளும்* *நானும்* " என,
வேறுபட்ட மனம் உடையவர்களாக இருந்தாலும் கணவனுக்காக மனைவியும், மனைவிக்காக கணவனும் விட்டுக் கொடுத்துப் போவது தான் வாழ்க்கை, என அறிவுரையை தெளிவாக தந்துள்ளார்....
சாலை விபத்தின் விவரத்தை விளக்கி,இடித்த அந்த நபர் மூன்றாம் நபர் காப்பீடு செய்திருந்தால் காப்பீட்டுத் தொகை கிடைத்- திருக்கும் என்பதோடு நிறுத்திக்கொள்ளவில்லை அவர். வாசகர்களுக்கும் ஒரு வேண்டுகோள் வைக்கிறார்.... மறக்காமல் உங்கள் வாகனங்களுக்கும் காப்பீடு செய்ய வேண்டும் என்று உறுதியாக கூறி இருப்பது வெகு சிறப்பு.... சோகத்திலும் சமூக சிந்தனை தான் முன்னின்றிருக்கிறது இந்த கவிஞருக்கு..
தீபாவளி சமீபத்தில் தான் நம்மை கடந்து சென்று உள்ளதால் இதை சொல்லியே ஆக வேண்டும். பாசிப்பருப்பு உருண்டை அதிரச மாவு குலோப் ஜாமுன் என்று பலகாரங்களை பார்த்தபோது சித்ராம்மா நினைவு வந்து கண்கள் குளமாகிவிட்டது..
சமைப்பதில் இவர் வல்லுநர், சொந்தங்களிடம் அன்பு பாராட்டுவதில் பண்பாளர்.மாமன் மச்சான் வீடுகளில் திருமணம், பிள்ளை பேறு , போன்ற நேரங்களில் இவரது சேவை அங்கு மிக முக்கியமானதாக இருக்கும் என மனைவியின் நேச வழியினை பாச மொழியால் வடித்திருப்பது சிறப்பு.
கூடவே இருக்கும் காலத்தில் அவரை பாராட்டியே இல்லை என்பதையும் ஆதங்கத்துடன் பதிவு செய்துள்ளார் இந்த கவிஞர்.
கவிஞரை இருமுறை மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் உடன் இருந்து காப்பாற்றியவர் அவர் மனைவி.
தனக்கு பிடித்ததை மனைவி செய்ய வேண்டும் என்றோ, மனைவிக்கு பிடித்ததை கணவன் செய்ய வேண்டும் என்றோ ஒருவரை ஒருவர் ஒருபோதும் நிர்ப்பந்தித்துக் கொண்டதே இல்லை என தங்கள் தூய வாழ்வியல் கோட்பாட்டினை நமக்கு பாடமாக்கி கொடுத்துள்ளார் இந்த நூலிலே.
மேலும் நூலில்,
மாமியார் மெச்சிய மருமகள் என்று தன் மனைவியை பாராட்டி உள்ளது எல்லா பண்புகளுக்கும் மகுடம் வைத்தார் போன்றது.
எங்கெல்லாம் வீட்டில் பிரச்சனை வளருமோ,
அங்கெல்லாம் அந்த பிரச்சனைகளை புரிதல் என்ற புனிதமான வார்த்தையால் இவர்கள் கடந்து வந்திருக்கிறார்கள்.... அதனால் தான், *மாதா பிதா குரு* *மூன்றும் ஒரே* *வடிவில் மனைவி* என இவரால் எழுத முடிந்திருக்கிறது.
*இன்பம் துன்பம்* *இரண்டும்* *கலந்ததே* *வாழ்க்கை* *வீட்டுக்கு வீடு* *வாசற்படி* *என்பது போலவே* *வாசல்* *தோறும்* *வேதனை பல* *உண்டு* . *இழப்புகள் வரலாம்* *_சோகம்_* *நிகழலாம் எதையும்* *தாங்கிடும் உள்ளம்* *வேண்டும்*
என்று மனதை தொடுகின்ற கவி வரிகளால் தன்னைத்தானே
பண்படுத்திக் கொண்டதோடு இந்த நூலை படிக்கும் நமக்கும் படிப்பினை தருகிறார்.
தனக்கு பல வகைகளிலும் உறுதுணையாக நின்ற மதிப்பிற்குரிய இறையன்பு ஐஏஎஸ் அவர்களுக்கு தன்னுடைய நன்றிகளை காணிக்கையாகி கொண்டுள்ள இந்த நல்ல மனிதர்,புகழ் வணக்கம் என்ற தலைப்பின் கீழ் மதுரையைச் சார்ந்த நம்மை விட்டு மறைந்து மறக்க முடியாத காலமாகி போன பெரியவர்களு க்கும் தனது புகழ் வணக்கங்களை காணிக்கையாக்கி கொண்டுள்ளார்.
தன்னை செதுக்கியசிற்பி என்று வர்ணித்து பேராசிரியர் இரா மோகன் அவர்களையும்,
மதுரைக்கே புகழ் சேர்த்த பட்டிமன்ற பிதாமகர் ஐயா சாலமன் பாப்பையா அவர்களையும்
தேன் தமிழில் கவி பேசி வான் அதிர தமிழ் சமைக்கும் வீரபாண்டிய தென்னவனார் அவர்களையும்...
வெகு அமைதியாக
தமிழ் வளர்சிக்கு புரட்சி செய்து வந்த பெரியவர் இளங்குமரனார் அவர்களையும் தனது புகழ் வணக்க கவிதைகளால் பாராட்டியதோடு....
பாட்டு கோட்டை யாருக்கு வாழ்த்து கோட்டை கட்டி...
இசைக்குயில்கள்
ஜானகி அம்மா, வாணி ஜெயராம், பாட்டு நிலா spb, திரைப்பட இயக்குனர் மணிவண்ணன்...சின்ன கலைவாணர் விவேக் இயக்குனர் இமயம் பாரதிராஜா ஆகியோருக்கும் புகழ் வணக்கங்களை செலுத்தி உள்ளார் கவிஞர்.
இந்த நூலிலே இறுதியாக தனது திருமண நாள் மற்றும் சஷ்டி அப்த பூர்த்தி புகைப்படங்களை பதிவிட்டது கொள்ளை அழகு. மனைவி ஜெயசித்ரா அவர்களின் நினைவுகளோடு இனி இவர் வாழப் போகும் ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு நிமிடமும் மகிழ்ச்சியாகவும் மன நிறைவுடனும் அமைந்திருக்க வலுச்சேர்க்கும் பேரன் சித்திரனுடன்
அமர்ந்திருக்கும் புகைப்படமும்.... எல்லாம் வண்ண படங்களாக இருந்திருக்கலாமே என்ற ஆதங்கத்துடன்....
நல்ல நூலினை வாசித்த மன திருப்தியுடன் நிறைவுசெய்கிறேன்.
இறையன்பு அய்யா சொன்னது போல் ஜெயசித்ரா அம்மா தன் உயிர் கொடுத்து இவருக்கு வாழ்நாட்களை தந்திருக்கிறார்.. இதை மனதில் நினைத்துக் கொண்டு,கவிஞர் இந்த நூலிலே உறுதி அளித்தது போல் தமிழுக்காக ஏதேனும் வெகு சிறப்பாக செய்து வரலாற்று பதிவாய் இலக்கியத்தில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே எம் போன்ற கவிஞர்களின் ஆசை.தமிழும் ஜெயசித்ரா வும் ஒன்றுதான் உங்களுடனே அவர் இருக்கிறார். இயங்கிக்கொண்டே இருங்கள் அதுதானே இறையன்பு ஐயா உங்களுக்கு கற்றுக்கொடுத்த கொள்கை....
நன்றி
ஆ. குமாரி லெட்சுமி )

கருத்துகள்
கருத்துரையிடுக