புரசைவாக்கத்தில் வாழும் லலிதா என்கிற 84 வயதான அம்மையார் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். விபத்து ஒன்றில் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு வயோதிகத்தின் காரணமாக அறுவைசிகிச்சை மேற்கொள்ள முடியாத சூழலால் நடக்க இயலாத நிலைமையை அடைந்தவர். ஒரே மகன் மலேசியாவில் பணியாற்றுகிறார். சிறுவயதிலேயே கணவனை இழந்த அவர் சிறு குழந்தையைப்போலத் தவழ்ந்துதான் நகர முடியுமென்றாலும் தானே சமைத்து, துவைத்து பராமரித்துக்கொள்ளும் வைராக்கியம் நிறைந்தவர். அவர் இளைஞர் சக்தியின் செயல்ப்பாடுகளை அறிந்து தன்னுடைய சேமிப்பில் ஒரு லட்சம் ரூபாயை அனுப்பியிருந்தார். அவருடைய கொடை உள்ளத்தைப் பாராட்டும் நோக்கத்துடன் முனைவர் இறையன்பு அவர்கள் அன்னாரை நேரில் சந்தித்து கௌரவித்தார்.
புரசைவாக்கத்தில் வாழும் லலிதா என்கிற 84 வயதான அம்மையார் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். விபத்து ஒன்றில் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு வயோதிகத்தின் காரணமாக அறுவைசிகிச்சை மேற்கொள்ள முடியாத சூழலால் நடக்க இயலாத நிலைமையை அடைந்தவர். ஒரே மகன் மலேசியாவில் பணியாற்றுகிறார். சிறுவயதிலேயே கணவனை இழந்த அவர் சிறு குழந்தையைப்போலத் தவழ்ந்துதான் நகர முடியுமென்றாலும் தானே சமைத்து, துவைத்து பராமரித்துக்கொள்ளும் வைராக்கியம் நிறைந்தவர்.
அவர் இளைஞர் சக்தியின் செயல்ப்பாடுகளை அறிந்து தன்னுடைய சேமிப்பில் ஒரு லட்சம் ரூபாயை அனுப்பியிருந்தார். அவருடைய கொடை உள்ளத்தைப் பாராட்டும் நோக்கத்துடன் முனைவர் இறையன்பு அவர்கள் அன்னாரை நேரில் சந்தித்து கௌரவித்தார்.


கருத்துகள்
கருத்துரையிடுக