தேவா பாடல்களில் வாழ்கிறார்.
- கவிஞர் இரா. இரவி
*****
தேனிசைத் தென்றல் பட்டத்தை மெல்லிசை மன்னர்
தேவாவிற்கு வழங்கி பாராட்டி வாழ்த்தினார்!
பிரபல நடிகர்கள் பலர் புகழ்பெற இசையமைத்தவர்
பாடல்கள் மட்டுமல்ல பின்னணி இசையிலும் கொடி கட்டியவர்!
பெரிய படம் சின்ன படம் பாகுபாடு இல்லாமல்
பாடல்களை சிறப்பாக இசையமைத்து தந்தவர்!
குத்துப்பாட்டு கானாப்பாட்டு காதல்பாட்டு என்று
கணக்கிலடங்காத பாடல்களுக்கு இசையமைத்தவர்!
ஒரு சில பாடல்களை தானே பாடி அசத்தியவர்
வேறு இசையமைப்பாளர்களிடமும் பாடல் பாடியவர்!
இசைஞானி இளையராஜா இசைப்புயல் ரகுமான்
இருவருக்கும் நடுவில் நிலையாக நின்றவர்!
சகோதரர்களுக்கு மட்டுமல்ல மகனுக்கும் இசையை
சந்தோசமாகக் கற்றுக் கொடுத்து இசையமைக்க வைத்தவர்!
உச்சநடிகரின் தொடக்க இசையை இன்றுவரை
உச்சத்தில் வைக்கும் இசையை அமைத்தவர்!
அனைத்துவகைப் பாடல்களையும் இசையமைத்தவர்
அனைவரும் விரும்பும் பாடல்களைத் தந்தவர்!
நானூற்றி எழுபத்தி மூன்று படங்களுக்கு இசையமைத்து
நானிலம் போற்றும் புகழ்பெற்ற வல்லவர்!
உடலைவிட்டு உயிர் பிரிந்திட்டப் போதும் உன்
பாடலை விட்டு ரசிகர் மனம் என்றும் பிரிந்திடாது
உலகில் உன்பாடல் தினந்தோறும் ஒலிக்கும்
ஒலிக்கும் பாடல்களில் என்றும் நீ வாழ்வாய்!

கருத்துகள்
கருத்துரையிடுக