படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி

அம்பேத்கரைத் தெரிந்து கொள்வோம் சாதிக் கட்டுப்பாட்டுக்கு அடங்க மறுத்தவரின் கதை நீதியரசர் N.ஆனந்த் வெங்கடேஷ் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் விலை : ரூ.40 தொடர்புக்கு : 0452 234 4106 "காசு இருந்தா எடுத்துக்குவாங்க, சொத்து இருந்தா புடுங்கிக்குவாங்க... ஆனா, படிப்ப மட்டும் யாராலயும் பறிக்க முடியாது!" என்ற அசுரன் திரைப்பட வசனத்திற்கு சாலப் பொருத்தமானவர் அண்ணல் அம்பேத்கர் என்பதை இந்நூலின் வழி உணரலாம். வெளிநாட்டில் முனைவர் பட்டம் பெற்று இந்தியா திரும்பி, பரோடா மன்னரின் ராணுவச் செயலாளராகப் பணியில் சேர்ந்த அம்பேத்கருக்கு சாதியின் காரணமாக தண்ணீர் கூட கொடுக்காமல்; அவருக்கென தனி தண்ணீர்க் குடுவை வைக்கப்பட்டது என்ற செய்தியை நூலாசிரியர் விளக்கியதோடு நின்று விடாமல் அதற்கும் ஒரு படி மேலே சென்று "இன்று அனைத்தும் சரியாகி விட்டதா என்ற கேள்வி இருந்து கொண்டே தான் இருக்கிறது" என்று தன் வேதனையை பதிவு செய்கிறார். தேசியக் கொடியில் நான்காவது வர்ணமாக அசோக சக்கரத்தின் நீல நிறத்தைக் குறிப்பிட்டுள்ளார். அது, சதி என்ற நால்வர்ண சாதியை ஒழித்து சமத்துவ சமுதாயம் படைக்க உதவும் என நம்புவோம். - சீ. தேவராஜபாண்டியன், மதுரை

கருத்துகள்