படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி

இனிய வாழ்விற்கு முனைவர்.வெ.இறையன்பு புத்தகம்* நாள்:44 தேதி:8-10-2026 புத்தகம் எண்ணிக்கை:44 புத்தகத்தின் பெயர்:முயற்சியும் விடாமுயற்சியும் ஆசிரியர் :வெ.இறையன்பு பதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் பக்கங்கள் :32 விலை :25 *இந்தப் புத்தகத்தின் அட்டைப்படமே கடின முயற்சி ஒன்று இருந்தால் போதும் எதையும் சாதித்து விடலாம் என்பதை உணர்த்துகிறது *முயற்சிகள் குறித்து எளிதாக உணர்ந்து கொள்ளும் விதத்தில் பல நுணுக்கமான தகவல்களை இறையன்பு அவர்கள் இந்தப் புத்தகத்தில் வழங்கி உள்ளார். *இறையன்பு அவர்களின் எழுத்து நடையே இந்தப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்கிய முதல் வரியில் இருந்து இறுதி வரி வரை நம்மை வேறு எதையும் நோக்கிச் செல்லாமல் இந்தப் புத்தகத்தை நோக்கியே வைத்திருக்கிறது. *இறையன்பு அவர்களின் ஒவ்வொரு வரிகளும் மதிப்பு மிகுந்த பொன்மொழி போல் படித்தவுடன் மனதில் பதிந்து விடுகிறது *முதல் முறை செய்வது முயற்சி. தோல்வி அடைந்தாலும் தொடர்ந்து செய்வது விடா முயற்சி என்ற முதல் வரியே நம்மை வியப்பில் ஆழ்த்தி விடுகிறது *இந்தப் புத்தகத்தில் படித்தவுடன் நான் வியந்த வரிகள் என்னை வியக்க வைத்த வரிகள். *மனிதன் முயற்சியால் முன்மொழியப்படுகிறான் விடாமுயற்சியால் வழிமொழியப்படுகிறான். *மனிதன் இயல்பிலே விடாமுயற்சி கொண்டவன் இன்று நேற்று அல்ல பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே அவன் முயற்சி செய்து படிப்படியாக முன்னேறியவன் *மனிதனையும் விலங்குகளையும் வேறுபடுத்துவது விடாமுயற்சியே *விடாமுயற்சி செய்து வெற்றிகளை கண்டவர்களே எளிதில் திருப்தி அடையாதவர்கள். *திருப்தி அடையாதே உள்ளமே விடாமுயற்சியின் வித்தாக இருக்கிறது *மனிதன் தன் மூளையை பயன்படுத்திக் கொண்டே இருக்கிறான். அடுத்த தலைமுறை இன்னும் அதிக நுண்ணறிவோடுவிளங்குகிறது எந்த நெருக்கடி வந்தாலும் அவன் எதிர்கொள்ள ஆயத்தமாகவே இருக்கிறான் *எல்லோருடைய முயற்சியும் ஒரே மாதிரி இருப்பதில்லை சிலர் முயல்வதே இல்லை *மனிதனை புரட்டிப் போட வரும் விபரீதங்களை விடாமுயற்சி என்னும் நெம்புகோலுடன் அவன் புரட்டி விடுகிறான் *அறிவினால் நிகழும் ஆபத்துகளை அறிவினாலே தீர்த்துக் கொள்கிறான் *போதும் என்று மனிதன் நினைத்து இருந்தால் 500 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட அறிவியல் புரட்சி நிகழ்ந்திருக்காது *எப்போது நாம் ஒன்றை விதி என்று நினைத்துக் கொள்கிறோமோ அப்போது நாம் முயற்சியைக் கைவிட்டு விடுகிறோம். *விதிப்படிதான் நடக்கும் என்றெல்லாம் சமாதானம் சொல்லி வாழ்கிறவர்கள் பெரும் சாதனைகளை நோக்கி பயணப்படுவது இல்லை *முதல் முறை முயன்ற மாதிரியே அடுத்த முறையும் என்றால் தோல்வி நிச்சயம் *எங்கு விழுந்தோம் எங்கே தடுக்கினோம் எங்கே சரிக்கினோம் எங்கே மூச்சு வாங்கியது என்பதையெல்லாம் அறிந்து கொண்டு சரி செய்யும்போதுதான் அது வெற்றியாகிறது. *முயற்சிக்கு எரிபொருள் ஆர்வம் விடாமுயற்சிக்கு எரிபொருள் வைராக்கியம். *உலக சரித்திரம் உருவான வழிமுறைகளை ஒற்றைச் சொல்லில் உரைக்க வேண்டும் என்றால் அது விடாமுயற்சியாகத் தான் இருக்க வேண்டும் *கண்டிப்பாக மாணவர்கள்,ஆசிரியர்கள், இளைஞர்கள் போட்டி தேர்வு எழுதுபவர்கள் படிக்க வேண்டிய நல்ல புத்தகம் *நன்றிகளுடன்* *இறையன்புவின் மாணவன்* 'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி, M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,B.A., தமிழக அரசுப் பள்ளி பட்டதாரி ஆசிரியர், சங்ககிரி- 637301 தொடர்புக்கு:9080290529 முகநூல்: Periasamy Varudharaj

கருத்துகள்