படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி

நேர்மைக்கான அங்கீகாரம் மதுரை மாநகர் காளவாசல், சொக்கலிங்க நகர் பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்பவரின் மனைவி மாரியம்மாள் என்பவர், தனது வயது முதிர்ந்த உடல்நலக்குறைவு ஏற்பட்ட தாயாரை சிகிச்சைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் உள் நோயாளியாகச் சேர்த்து அவருக்குத் துணையாக மருத்துவமனையில் தங்கியிருந்த நிலையில் 28.09.2026 அன்று வார்டு அருகே தனது தாயாரின் மருத்துவச் செலவுக்காக வைத்திருந்த ரூ.69,380/- அடங்கிய பணப்பையை எதிர்பாராதவிதமாகத் தவறவிட்டார்.அப்போது அப்பகுதியில் பணியில் இருந்த தனியார் ஒப்பந்த நிறுவன பாதுகாவலர் திரு.கருமலை கண்ணன் என்பவர், கேட்பாரற்றுக் கிடந்த பணப்பையைக் கண்டெடுத்து, அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதற்கிடையே, மருத்துவமனை வளாகத்தில் பணப்பையைத் தேடிக் கொண்டிருந்த மாரியம்மாளிடம் விவரத்தைக் கூறி அவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து முறைப்படி விசாரணை மேற்கொண்டு, தவறவிட்ட பணப்பையை அவர்களிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர். சிரமமான சூழலில் மருத்துவ சிகிச்சைக்கு வந்த ஏழைப் பெண்மணி தவறவிட்ட பெரிய தொகையைக் கண்டெடுத்து, நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த தனியார் பாதுகாவலர் திரு. கருமலை கண்ணன் அவர்களின் நற்செயலை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.S. இராஜேந்திரன் இ.கா.ப., அவர்கள் அவர்கள் வெகுவாகப் பாராட்டி, அவரை நேரில் அழைத்து நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தார்

கருத்துகள்