துபாயில் நூல் அறிமுக நிகழ்ச்சி துபாய் : துபாய் பொது நூலகத்தில் கவிஞர் இரா. இரவி எழுதிய கலைமாமணி கு. ஞானசம்பந்தன் கருவூலம் என்ற நூல் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், வாசகர்கள் ஷாம், சுல்தான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது பேசிய முதுவை ஹிதாயத், கலைமாமணி கு. ஞானசம்பந்தன் எழுதிய பத்துக்கும் மேற்பட்ட நூல்களைப் படித்து, அவற்றிற்கு மதிப்புரை வழங்கி, அவற்றையெல்லாம் தொகுத்து நூலாக்கி, அவரது எழுத்தாற்றலை உலகு அறியச் செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் இந்த நூலை கவிஞர் இரா. இரவி படைத்துள்ளார். இதனை அனைவரும் வாங்கி படித்து பயன்பெற வேண்டும் என்றார்.
துபாயில் நூல் அறிமுக நிகழ்ச்சி
துபாய் :
துபாய் பொது நூலகத்தில் கவிஞர் இரா. இரவி எழுதிய கலைமாமணி கு. ஞானசம்பந்தன் கருவூலம் என்ற நூல் அறிமுக நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், வாசகர்கள் ஷாம், சுல்தான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய முதுவை ஹிதாயத், கலைமாமணி கு. ஞானசம்பந்தன் எழுதிய பத்துக்கும் மேற்பட்ட நூல்களைப் படித்து, அவற்றிற்கு மதிப்புரை வழங்கி, அவற்றையெல்லாம் தொகுத்து நூலாக்கி, அவரது எழுத்தாற்றலை உலகு அறியச் செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் இந்த நூலை கவிஞர் இரா. இரவி படைத்துள்ளார். இதனை அனைவரும் வாங்கி படித்து பயன்பெற வேண்டும் என்றார்.



கருத்துகள்
கருத்துரையிடுக