25.10.2026.மாமதுரைக் கவிஞர் பேரவை சிந்தனைக் கவியரங்கம் .51.- திருக்குறள் காட்டும் வாழ்வியல் !
மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் &தொடக்கப்பள்ளியில்.செயலர் தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா .இரவி வரவேற்றார் .தலைவர் பேராசிரியர் சி .சக்திவேல் தலைமையில் கவியரங்கம் நடந்தது பொருளாளர் இரா .கல்யாணசுந்தரம் ,துணைத்தலைவர் முனைவர் இரா .வரதராசன் இருவரும் முன்னிலை வகித்தனர் .சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட யுனஸ்கோவின் அமைதிக்கான இளைஞர்கள் திட்டம் துபாய் தமிழர் தேர்வு செய்யப்பட்ட துபாயில் வசித்துவரும் தமிழக இளைஞர் கவுரி சங்கர் சிவபாலா அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி விருது நூல்கள் வழங்கி பாராட்டினார்கள்.மதுரை உலா நற்பணி மன்றத்தின் தலைவர் ரெ.கார்த்திகேயன் சிறப்பு விருந்தினரை பொன்னாடை போர்த்திப் பாராட்டினார்
பேரவையின் தலைமைப் பொறுப்பாளர் ஆதிசிவத் தென்னவன் நன்றி கூறினார்.விழாவிற்கு வருகைதந்த கவிஞர்களுக்கு முனைவர் இரா .வரதராசன் ,பழனி இருவரும் தங்கள் நூல்களை வழங்கினார்கள் .
.சிந்தனைக் கவியரங்கம் .51
பேரவையின் தலைவர் பேராசிரியர் சி .சக்திவேல் தலைமையில்
" திருக்குறள் காட்டும் வாழ்வியல் " என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது .கவிஞர்கள் இரா .இரவி,இரா .கல்யாணசுந்தரம் ,முனைவர் இரா .வரதராசன் ,பொன்பாண்டி ,சோ..தமிழன்பன் ,கு பால் பேரின்பநாதன் ,ந .சுந்தரம் பாண்டி ,சங்கரநாராயணன் ,.பழனி ,ச .லிங்கம்மாள் ,செ.அனுராதா,போ .சிவசத்யா,,இரா .நீல மணிவண்ணா கண்ணன் ,அஞ்சூர்யா ஜெயராமன், விமலா ராமமூர்த்தி,,இளையான்குடி இதயத்துல்லா ,முனைவர் ஸ்ரீவித்யா பாரதி ,மதுரை மைந்தன்,ஜெயராஜ்,,சு .பாலகிருட்டிணன் ,பா .சாந்தி,பா .ஜெயசீலன் ,ச .முத்துக்குமரன் ,அ..ஜெகதீசன் ,க .பாஸ்கரன்,க .பாலசுப்ரமணியன் ஆகியோர் கவிதை பாடினார்கள் சிறப்பாக கவிதை வாசித்த கவிதாயினி விமலா ராமமூர்த்தி அவர்களுக்கு கவிமாமணி வீரபாண்டியத் தென்னவன் விருது வழங்கினார்கள்..
கவிதைப்போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கு பதக்கமும் சான்றிதழும் பேரவையின் சார்பில் சிறப்பு விருந்தினர் கவுரி சங்கர் சிவபாலா வழங்கினார்.கவிஞர் இரா.இரவி மாண்புமிகு மனைவி நூல் எழுதியமைக்காக ஆதிசிவதென்னவன் மதுரைத்தென்றல் விருத்தி வழங்கிப் பாராட்டினார் .
மாதாமாதம் கவியரங்கம் நடத்திட மணியம்மை பள்ளியைத் தந்து உதவும் பி.வரதராசன் அவர்களுக்கு அனைவரும் நன்றி கூறினார்கள்.படங்கள் மதுரை உலா ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்

கருத்துகள்
கருத்துரையிடுக