தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு ! கவிஞர் இரா .இரவி ! 24.10.2025

தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு ! கவிஞர் இரா .இரவி ! மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள லாரி புக்கிங் அலுவலகங்களை மாட்டுத்தாவணிக்கு மாற்ற திட்டம் தீட்டப்பட்டது .விரைவில் அங்கு போய்விடும் என்று பல வருடங்களாக சொல்லி வருகின்றனர் .இதனை உடனடியாக மாட்டுத்தாவணி பகுதிக்கு செல்ல ஆணையிட வேண்டும் . வடக்கு மாசி வீதியில் சாமி ஊர்வலம் அடிக்கடி வரும் .வரும்போதும் லாரி அலுவலகங்களால் இடைஞ்சல் ஏற்படுகிறது..லாரிகளால் மிகவும் இடைஞ்சல் ஏற்படுகிறது .முன்பு அரசுப்பேருந்தை நான்கு மாசி வீதி சுற்றும் வகையில் இயக்கினார்கள். வடக்கு மாசி வீதியில் லாரிகள் காரணமாக ஓட்ட முடியாத்தால் பேருந்தை,நிறுத்தி விட்டனர் . வடக்கு மாசி வீதியில் வீட்டு திண்ணையை வாடகைக்கு எடுத்து லாரி புக்கிங் அலுவலகம் வைத்து வரும் பொருட்களை நடைபாதியில் ,சாலையில் வைத்து விடுகின்றனர் ..நடந்தும் செல்ல முடிவதில்லை .வாகனத்திலும் செல்ல முடியவில்லை வடக்கு மாசி வீதியில் குடியிருப்பவர்கள் அனைவருக்கும் மிகவும் தொல்லையாக உள்ளன .லாரி அலுவலகங்கள்.இப்பகுதி மக்கள் வெளியூர் சென்று வீட்டு மதுரை ரயில் நிலையத்திலிருந்து வடக்கு மாசி வீதிக்கு செல்ல ஆட்டோவை அழைத்தால் யாரும் வருவதில்லை .அங்கு லாரிகள் இருக்கும் போக முடியாது .என்கின்றனர் .நடந்தே வர வேண்டிய நிலை ..மதுரையின் மையப்பகுதியில் லாரிகள் ஆக்கிரமிப்பால் மதுரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் முகம் சுளிக்கின்றனர் . 24.10. 2026. இன்று 8 காலை மணிக்கு எடுத்த படங்கள் .காலை 6 மணிக்குள் சென்றுவிடவேண்டும் என்று விதி இருந்தபோதும் பள்ளி வாகனங்கள் வரும் நேரம் 8 காலை வரை லாரிகளை நிறுத்தி சரக்கு ஏற்றுகின்றனர் .காவல்துறையை கவனித்து விடுவதால் அவர்கள் இதனை கவனிப்பதில்லை. பள்ளி வாகனங்கள் வரும்போது விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது . விரைவில் மதுரை வடக்குமாசி வீதியிலிருந்து லாரிப்புக்கிங் அலுவலகங்களை மாட்டுத்தாவணி பகுதிக்கு மாற்றிட வேண்டுகிறேன் .

கருத்துகள்