17.10.2026.நூல் வெளியீடு மற்றும் நூல் மதிப்புரைக் கூட்டம். மதுரை வாசகர் வட்டம் சார்பில் அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் நூல் வெளியீடு மற்றும் நூல் மதிப்புரைக் கூட்டம் நடைபெற்றது.

நூல் வெளியீடு மற்றும் நூல் மதிப்புரைக் கூட்டம். மதுரை வாசகர் வட்டம் சார்பில் அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் நூல் வெளியீடு மற்றும் நூல் மதிப்புரைக் கூட்டம் நடைபெற்றது. கவிஞர் இரா. இரவி எழுதிய "மாண்புமிகு மனைவி" என்ற நூலை, அமைப்பாளர் பா. சண்முகவேலு கூட்டத்திற்கு தலைமை தாங்கி நூலை வெளியிட்டு, நூலாசிரியரை வெகுவாகப் பாராட்டினார். பள்ளித் தலைமை ஆசிரியர் ஷேக் நபி அதனைப் பெற்றுக் கொண்டு, கவிஞர் ரவி துயரத்திலும் நிலை குலையாதவர். அவர் ஒரு நாத்திகவாதி மற்றும் சீர்திருத்தவாதி என்று வாழ்த்திப் பேசினார். ஒருங்கிணைப்பாளர் பேரா. ஜி. ராமமூர்த்தி சென்றமாத செயல்பாடுகளை விவரித்ததுடன், கவிஞர் இரவி, தான் துயருற்ற நிலையிலும் 39 ஆவது நூலை வெளியிடுவது பாராட்டுக்குரியது என்றார். எழுத்தாளர் முனைவர் உ. அனார்கலி அவர்கள் தனது மதிப்புரையில், தன் மனைவியுடன் 34 ஆண்டுகள் வாழ்ந்த நினைவுகளை அசைபோட்டு இந்நூலை தொகுத்துள்ளார். அவர் மனைவி அவரிடம் தான் இல்லாமல், தனியாக வாழப் பழகிக் கொள்ளுங்கள் என்பாராம். சைவ உணவு சாப்பிடும் அவர் மனைவி, இவருக்கு ஊர்வன, பரப்பன போன்ற அனைத்து அசைவ உணவுகளை தயாரித்துக் கொடுப்பாராம். முதல் தலைத் தீபாவளிக்கு மனைவியின் மீதுள்ள அன்பால் புத்தாடை அணிந்ததாகக் கூறுகிறார். கல் கண்ட இடத்தையெல்லாம் கடவுள் எனக் கும்பிட்ட தன் மனைவியை, எந்தக் கடவுளும் சாலை விபத்தில் பலியான தன் மனைவியைக் காப்பாற்றவில்லை. இது தன் நாத்திக நம்பிக்கைக்கு வலு சேர்ப்பதாக உள்ளது என்று வருந்துகிறார். அவருக்கு இறையன்பு கூறிய "எதையும் தாங்கும் மனத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் ரவி எனக் கூறியதைக் குறிப்பிட்டு, தன் மதிப்புரையை நிறைவு செய்தார். கவிஞர் நீல மணிவண்ண கண்ணன், தன் வாழத்துறையில், இரவி ஹைக்கூ கவிதைகளின் அறங்காவலர். மனைவியின் மீதுள்ள காதலுக்கு நூல்களால் தாஜ் மஹாலைக் கட்டியவர். மனைவியைத் திருப்திப்படுத்த, திருமண நாளுக்கு முருகன் கோயிலுக்குச் சென்றவர். பட்டிமன்ற நடுவர் கவிஞர் மூரா, பேசும்போது, இரவி மிகச் சாதாரணமாக இருப்பவர். அவர் தன் இணையரை இழந்தாலும், எங்கள் துணையை, நட்பை இழக்கவில்லை. தமிழ் அவரை 100 ஆண்டு வாழ வைக்கும் என்றார். இரவியின் சிறப்பான பண்புகளை, வாசகர்கள் பேரா. கண்ணன், சரஸ்வதி உமா, சிவசத்யா, சுலேகா பானு போன்றோர் எடுத்துக் கூறினர். இரவி தன் ஏற்புரையில், அனைவரும் தங்கள் மனைவியை மதியுங்கள், நன்றி சொல்லுங்கள், பாராட்டுங்கள்,போற்றிப் புகழுங்கள். இறந்தபோது வருந்துவதை விட, இருக்கும்போதே பாராட்டுங்கள். தான், வாழும்போது தன் மனைவியைப் பாராட்டாத கஞ்சன் என தன் ஏற்புரையை முடித்துக் கொண்டார். வாசகர் தேவராஜ் பாண்டியன் நன்றி கூறினார். வாசகர்கள் ராமசாமி, தங்கவேலு, ராஜகோபால், ஜெயசீலன், தங்கராஜ் போன்றோர் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்தனர். மேற்காணும் செய்தியினை தங்கள் நாளிதழில் செய்தியாகப் படத்துடன் வெளியிடக் கேட்டுக் கொள்கிறோம். நன்றி. ஜி. ராமமூர்த்தி ஒருங்கிணைப்பாளர்.

கருத்துகள்