14.10.2026தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் மதுரை மாநகர் 14 ஆம் மாத நிகழ்வு கோ. புதூரில் உள்ள ஓரியண்டல் மழலையர் மற்றும் துவக்கப் பள்ளியில் புதன்கிழமை காலை நடைபெற்றது
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் மதுரை மாநகர் 14 ஆம் மாத நிகழ்வு கோ. புதூரில் உள்ள ஓரியண்டல் மழலையர் மற்றும் துவக்கப் பள்ளியில் புதன்கிழமை காலை நடைபெற்றது . பள்ளியின் முதல்வர் பரிதா பேகம் வரவேற்புரை ஆற்றினார்கள் .தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் திரு நஜுமுதீன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க , தாளாளர் அல்ஹஜ் எஸ் . சையது அபுதாஹிர் முன்னிலை வகித்தார் . நோக்க உரையினை தசிஎகச செயலாளர் உலக சாதனை நல்லாசிரியர் சுலைகா பானு அவர்கள் ஆற்றினார்கள் . இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மேஜிக் நிபுணர் மற்றும் பன்முக கலைஞர் பரமேஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டு மேஜிக் நிகழ்ச்சியினை செய்து காட்டி அனைவரையும் மகிழச் செய்தார் .தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி சிறப்பு விருந்தினர்களுக்கு தனது நூல்களை வழங்கி வாழ்த்தினார். குழந்தைகளின் வாசிப்பு அனுபவ பகிர்வாக யாழ் சு . சந்திரா அவர்கள் எழுதிய நம்பி சொன்ன நற்றமிழ் கதைகள் நூலில் இருந்து அனுசுயா குழுவினர் நாடகம் நடைபெற்றது. குழந்தைகள் நேரு , காந்தி , வேலுநாச்சியார் , அப்துல் கலாம் போன்ற தேச தலைவர்களை போன்று மாறுவேடம் அணிந்து மிகவும் உற்சாகமாக இருந்தார்கள். குழந்தைகள் தாங்கள் வாசித்த புத்தகத்திலிருந்து கதைகளை கூறினார்கள் . நிகழ்வினை தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர் சங்கத்தின் பொருளாளர் துளிர் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள் . தசிஎகச துணைத் தலைவர் முனைவர் ஜோஸ்பின் மேரி அவர்கள் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவடைந்தது.




கருத்துகள்
கருத்துரையிடுக