உலக ரோஜா தினம்" - மெலிண்டா ரோஸ் நினைவாக..,*
அரிய வகை இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கனடாவைச் சேர்ந்த 12 வயது மெலிண்டா ரோஸின் நினைவாக,
புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக "உலக ரோஜா தினம்" முதன் முதலில் அனுசரிக்கப்பட்டது.
மருத்துவர்கள் அவள் இன்னும் ஆறு வாரங்கள் மட்டுமே உயிருடன் இருப்பாள் என கை விரித்து விட்டார்கள்.
மெலிண்டா அதை நினைத்து துக்கப்படுவதற்குப் பதிலாக அவள் வாழ்க்கையின் கடைசி தருணங்களை
முழு மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் அனுபவிக்க முடிவு செய்து,
அந்த ஆறு மாதங்களை உயிர்ப்புடன் வாழ முடிவு செய்தாள்,
அவள் இறக்கும் வரை.
தன்னைச் சுற்றி இருக்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் கொண்டு வருவதற்காக அவள் நேரத்தை செலவிட்டாள். இறுதியாக அவள் இந்த உலகை விட்டு சென்ற போது , உலகெங்கிலும் உள்ள அனைத்து புற்றுநோயாளிகளுக்கும், அவள் நம்பிக்கையின் அடையாளமாக மாறினாள்.
புற்றுநோயாளிகளுக்கு பிரார்த்தனை செய்வதற்கும், அவர்களை வாழ்த்துவதற்கும் ரோஜா பூக்களை வழங்குவது எப்பொழுதும் பாரம்பரியமாக இருந்து வந்திருக்கிறது. மெலிண்டா ரோஸ் இறந்தபோது, அஞ்சலி செலுத்தும் வகையில்
அவளது ஆதரவாளர்கள் ரோஜாக்களை தூவினர். அன்றைய நாளிலிருந்து புற்றுநோயாளிகளுக்கு ரோஜாக்களை வழங்கி, மெலிண்டா ரோஸின் நினைவாக இந்த நாளைக் கொண்டாடுவது ஒரு அடையாளமாக மாறிவிட்டது.
துரதிர்ஷ்டவசமாக, மருத்துவம் மற்றும் அறிவியல் துறைகள் புற்றுநோய்க்கான
சரியான சிகிச்சையை இன்னும் கண்டுபிடிக்கவில்லை, தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள்.
அதுவரை நாம் அனைவரும் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களின் உடல் மற்றும் மன ரீதியான துன்பங்களை கவனத்தில் கொண்டு அவர்களுக்கு ஆறுதலாக,
தொடர்ந்து போராடும் வலிமையை தரும் வகையில் நம்மால் இயன்றளவு பங்களிக்க முடியும் என்பதை இந்த நாளில் உறுதி ஏற்போம்.
இங்கிலாந்திலிருந்து
சங்கர் 🌹

கருத்துகள்
கருத்துரையிடுக