தமிழிசையை மேடையேற்றி தனது வெண்கல குரலில் பாடி பரப்பி வந்த சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் தமிழில் பாடுகின்றார் என்ற ஒற்றை காரணத்தை வைத்து சபாக்களில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு தடைவிதித்தது பார்ப்பனக்கூட்டம். தெலுங்கு கீர்த்தனைகளை பாடினால் மட்டுமே சபாக்களில் பாட அனுமதி என்று, சீர்காழி கோவிந்தராஜனின் தமிழுனர்ச்சியை, தொழிலை, முடக்கிப்போட திட்டமிட்டு செயலாற்றிய பார்ப்பன சூழ்ச்சியை அறிந்த, தந்தை பெரியார் அவர்கள், நெற்றியில் சந்தனம், விபூதி பட்டையோடு பக்திப்பாடல்கள் பாடிவரும் சீர்காழியை அழைத்து தனது பகுத்தறிவு மேடைகளில் பக்திப்பாடல்களை பாடவைத்தார்.
முதலில் சீர்காழி அவர்கள் பக்திப்பாடல்கள் பாடிமுடித்தப் பின்னர், கடவுள் இல்லை என்று பேசத்தொடங்கும் பெரியார் அவர்கள் கடவுள் கதைகளை நார்நாராய் கிழித்து காயப்போட்டாலும், சபாக்கள் சீர்காழியை அழைத்து பாட வைக்கும்வரை தனது பகுத்தறிவு மேடையில் பக்திப்பாடல்களை பாடுவதை அனுமதித்தார். பெரியார் செய்யும் இந்த செயல் சமூகத்தில் வேறு சிக்கலை உண்டாக்கும் என பயந்த பார்ப்பனர்கள் சீர்காழி கோவிந்தராஜனை சபாக்களில் பாட அனுமதித்தார்கள்.
இனமானம் காக்க தன்மானத்தைப்பற்றி கவலைப்படாத தன்மானத் தலைவர் அவர். தமிழும், தமிழிசையும் அவமானபடுத்தப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமறுத்த புரட்சியாளர் அவர்.
#அவர்தான் பெரியார்_தெரிந்துகொள்ளுங்கள்

கருத்துகள்
கருத்துரையிடுக