படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி

நம்மூரு ... நம்மவர்கள்! ++++++ # செ. அபுதாகிர் # மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் திருப்பணி முடித்து, கும்பாபிஷேகம் 1963ல் விமர்சையாக நடந்தது. அதேகாலகட்டத்தில் மதுரை கீழவாசல் பகுதியில் உள்ள செயின்ட்மேரீஸ் சர்ச் விரிவாக்கப்பணிகள் நடந்து வந்தன. இங்கு பங்குத்தந்தையாக இருந்த எக்ஸ்.எம். அடைக்கலம் கட்டடப் பணிகளை முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார். மீனாட்சியம்மன் கோயில் திருப்பணிகளுக்கு பயன்படுத்திய ஆயிரக்கணக்கான மரச்சாரங்கள் அப்படியே கிடந்தன. மீனாட்சி கோயிலின் அன்றைய அறங்காவலர் குழு தலைவரான பி.டி. ராஜன், சர்ச் பணிகளுக்கு மர சாரங்கள் தேவை இருப்பதை அறிந்தார். ‘கோயிலோ, சர்ச்சோ கடவுளுக்கான திருப்பணியில் நமக்குள் பேதமென்ன’ என்றபடி கோயிலுக்கு பயன்படுத்திய சாரங்கள் அனைத்தும் சர்ச் புனரமைப்பு பணிக்காக வழங்கப்பட்டன. மதுரை செயின்ட்மேரீஸ் ஆலயத்தினர் கூறுகையில், ‘மதுரையின் மத ஒற்றுமை உணர்வு வெளிப்படுத்திய இந்த உன்னத நிகழ்வு நடந்து பல ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. வேற்றுமையில் ஒற்றுமை, சமய சகிப்புத் தனம், மதம் கடந்த மனிதம் என நம்மூரில் நம்மவர்களிடம் இன்றளவும் இந்த பாச உணர்வு தொடர்கிறது’ என்றனர்.

கருத்துகள்