நீட் - நீட்டிக்கக் கூடாது! கவிஞர் இரா. இரவி !

நீட் - நீட்டிக்கக் கூடாது! கவிஞர் இரா. இரவி ! நீட் தேர்வில் மடிந்த உயிர்கள் போதும் நீட் தேர்வை இல்லாது ஒழித்திட வேண்டும்! மேல்நிலை இரண்டாம் ஆண்டு மதிப்பெண்ணால் மேல்நிலை அடைந்தனர் முந்தைய மருத்துவர்கள்! பயிற்சி வகுப்புகள் என்ற பெயரில் சிலர் பல்லாயிரம் கொள்ளையடிக்க உதவுவதே நீட் தேர்வு! ஏழை எளிய மக்களுக்கு மருத்துவக் கல்வியை எட்டாக்கனியாக்கிய நீட்-டுக்கு முடிவு கட்டுவோம்! நீட் தேர்வு ஒவ்வொன்றிலும் நடக்குது முறைகேடு நீட் தேர்வு வினாக்கள் கசிவது வாடிக்கையானது! ஒட்டுமொத்த ஊழலின் ஊற்றுக்கண்ணாய் நீட் தேர்வு ஒன்றிய அமைச்சர் ராஜினாமா மட்டும் போதாது! பணக்கார வீட்டுப் பிள்ளைகளே பயிற்சிப் பெற்று போட்டியில் வென்று மருத்துவம் படிக்கின்றனர்! கிராமத்து மாணவர்களுக்கு சவாலாக உள்ளது கருமம் பிடித்த நீட்-டுக்கு முடிவுரை எழுதுவோம்! சோதனை என்ற பெயரில் தரும் தொல்லைக்கு சோர்ந்து விடுகின்றனர் மாணவ-மாணவியர்! மேல்நிலை இரண்டாம் ஆண்டு மதிப்பெண் போதும் மேலான அம்முறையே நடைமுறையாக வேண்டும்! நீட் தேர்வு முறையாக நடக்கவில்லை ஒருபோதும் நீட் நீட்டிக்கக் கூடாது முடிவு கட்டுவோம்!

கருத்துகள்