மதுரை மாநகராட்சி மேயர்(பொறுப்பு) வணக்கத்திற்குரிய தி. நாகராசன் அவர்களுக்கு நன்றி ! நன்றி ! முச்சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் - " பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் " என்ற இலட்சிய குறிக்கோளுடன் மதுரை தல்லாகுளம் அழகர் கோவில் சாலையில் சுமார் 27 ஆண்டுகளுக்குமுன் "அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் " தொடங்கப்பட்டு நடைபாதை மேடையில் போக்குவரத்திற்கு இடையூறின்றி மாநகராட்சி அனுமதியுடன், காவல் ஆணையர் அவர்களின் தடையில்லா சான்று பெற்று, " அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் 8' க்கு 4' பலகை அழகுற அமைத்து நாள் நாள்தோறும " குறளும் - பொருளும் " எழுதி "குறள் நெறி" மக்கள் மத்தியில் பரப்பும் தூய தொண்டிற்கு "தடங்கல் வந்துவிடுமோ" என்றவுடன் காலம் கருதி வருகை தந்து தடையை தகர்த்தெறிந்து தொய்வின்றி குறள் நெறி பரப்பிட பெருந்துணை புரிந்த மதுரை மாநகர வணக்கத்திற்குரிய மேயர் (பொறுப்பு) மானமிகு. தி. நாகராசன் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். அழைத்தவுடன் வருகை தந்து பெருந்துணை புரிந்த அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றத்தின் காப்பாளர்கள் புரட்சிப் பாவலர் மன்றத் தலைவர் " பெரியார் நெறியாளர் " திரு. பி. வரதராசன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் இராம. வைரமுத்து, பொதுவுடைமைத் தோழர் இராம. விசயராசன், குறும்பா பாவலர் திரு. இரா.. இரவி, மாமன்ற மேனாள் உறுப்பினர் திரு. கா.ரா. முருகேசன் திராவிடப் போராளி திரு. முத்திருளன் தடைகள் வந்துற்ற போதும் தடந்தோள்கள் உண்டு என்று நிரூபிக்கும் வருகை தந்து கடமையாற்றிய இலக்கிய மன்ற நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். "சோதனைக் கொம்பை முறித்து சாதனை படைத்து தொடர்ந்து குறள் நெறி பரப்பிட உறுதி ஏற்போம்! அன்புடன் என்.எம். மாரி. கேவிஆர் தலைவர். செயலர்

கருத்துகள்
கருத்துரையிடுக