படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி

Ponni Selvi மறக்க முடியாத வாக்கியங்கள்,சொற்றொடர்கள் பெயர்கள்….. ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ பதிவு : 209 1. பேருந்தின் வாசகம் பின்புறம் சாதாரணமான வாசகம் சொல்ல இயலாது. சில தலைமுறைகள் கடந்தாலும் புரியாமல் கடந்து சென்றது வடிவேலு அந்த வாசகத்தை நகைச்சுவை படுத்தியது எத்தனை தலைமுறைகள் ஆனாலும் மறக்கவும் முடியாது எத்தனை துயரங்கள் கவலையோடு வெளியே செல்லும் போது பேருந்து பின்புறம் பார்த்தாலே என்னையும் அறியாமல் சிரித்து விடுவேன் . எல்லாம் கரைந்து போகும் “ இந்த பேருந்து உங்கள் சொத்து - அதை பாதுகாப்பது உங்கள் கடமை “ “ அரசு பேருந்து உங்கள் சொத்து - அதை பாதுகாப்பது உங்கள் கடமை “ வடிவேலு நகைச்சுவையாக சொன்னாலும் இன்றைய காலத்தில் பேருந்து நாசாமாக்குவது இல்லை 2. திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி பாடல் மறக்கவே இயலாது பிரியாணி தவிர்த்து வேறு உணவு மாறுதலுக்கு சாப்பிடலாம் முடிவு எடுத்து செல்வோம் ஆனால் ஹோட்டல் உள்ளே நுழைந்தவுடன் அப்பாடலை கேட்டாலே பிரியாணி சாப்பிட தூண்டும் “ நெய் ஊத்தி பாசம் கொட்டி சமைச்சது திண்டுக்கல் தலப்பாகட்டி “ “ நெய் ஊத்தி நேசம் கொட்டி படைச்சது திண்டுக்கல் தலப்பாகட்டி “ நெய் ஊத்தி நேசம் கொட்டி இழுக்குது திண்டுக்கல் தலப்பாகட்டி “ இன்னொரு ப்ளேட் பிரியாணி வாங்கி சாப்பிட தூண்டும் ஒரே நிறுவனம் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி கோபத்தில் மன சங்கடத்தில் வரும் வார்த்தைகள் 1. வீட்டில் நொய்யு நொய்யுன்னு நச்சரித்தாங்க ஒரு கட்டத்தில் “ முருகா டேய் முருகா எங்கடா போனே எனக்கு எப்ப விடுதலை கிடைக்கும்” நான் சத்தமாக கத்தி விடுவேன் எல்லோரும் கப்சிப் அமைதியாகி விடுவாங்க அதற்க்குள் பெரிசு மெதுவாக கடவுளை வாடா போடா சொல்ற , உன் காதலனா புருஷனா கேட்பார் ஆமாம் என் தாத்தா எனக்கு வள்ளி தெய்வாணை பேர் வைத்தார் கடவுளோ , புருஷனோ , காதலனோ முருகா கத்தினால் சொன்னால் அடங்கறீங்களே அது போதும் என்பேன். 2. ஒரு வேலையில் முழு கவனம் செலுத்தி செய்யும் போது யாராவது ஐடியா கொடுக்கிறேன் நச்சரித்தால் “ பொத்து “ கத்தி விடுவேன் 3. ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப சொன்ன “ கொசு தொல்லை தா்ங்கல “ சொல்வேன் நான் கூறும் இந்த மூன்று வார்த்தைகள் பொறுமையும் மீறி வரும்போது அதன் பலம் சக்தி ஒலியின் ஓசை எதிராளி அடக்கி விடும் நன்றி வணக்கம் Ponni Selvi தலைப்பு பரிந்துரைத்த Shanbakam Pandian Latha Ravi Thangadurai மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்

கருத்துகள்