படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி

நம் மொழிப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டும் வழக்கம், வெகுவாக குறைந்துவிட்டது. மான்யம் கொடுக்கப்படும், வரிசலுகை வழங்கப்படும், கண்டிப்பாக தமிழில் மட்டுமே திரைப்பட பெயர்கள் வைக்க வேண்டும் என்று சொன்னால் மட்டுமே இது சாத்யம் என்கிற நிலைக்கு திரையுலகம் வந்துவிட்டது. தமிழ் இயக்குனர், தயாரிப்பாளர்கள் தாமாக முன் வர வேண்டும். சமீபமாக வந்த Hi 🙂 என்கிற திரைப்படத்தை நேற்று திரையரங்கில் பார்த்தேன். கவின் மற்றும் நயன்தாராவின் ஃபிரெஷான, துடிப்பான ஆன்-ஸ்கிரீன் ஜோடி என்கிற கலவையுடன் பின்னப்பட்ட ஸ்கீரின் ப்ளே, படத்தின் முதல் பாதியை நன்றாகவே தாங்கிப் பிடிக்கிறது. கவினின் இயல்பான நகைச்சுவை டைமிங்கும், வட்டார ஸ்லாங்கும் படத்திற்கு பலம். மறைந்த இயக்குனர் பாக்யராஜ், பிரபு, ராதிகா போன்ற மூத்த நடிகர்களின் வருகை, கதையோட்டத்தின் கதகதப்பான குடும்பச் சூழலையும், தேவையான நகைச்சுவையையும் திகட்டாமல் தருகிறது. படத்தின் செகண்ட் ஹாஃப், வழமையான, பழைய திரைக்கதை சூத்திரங்களையே சார்ந்துள்ளது. லை செட் அப், ஃபேக் பிரக்னன்சி மற்றும் அதிகமான ஃபேமிலி சென்டிமெண்ட் காட்சிகள் படத்திற்கு பலவீனம். சில உணர்ச்சிகரமான காட்சிகள் தேவையின்றி நீளமாக இழுக்கப்பட்டு, படத்தின் முதல் பாதியில் இருந்த சுறுசுறுப்பைக் குறைக்கின்றன. கவின் நடிப்பு அபாரம். எக்ஸலண்ட் பெர்ஃபார்மன்ஸ். நயன்தாராவின் நடிப்பில் மட்டுமல்ல முகத்திலும் முதிர்ச்சி தெரிகிறது. மொத்தத்தில் Hi 😉 movie is a casual, easy-going theatrical watch with family. பிகு:- மேலே காணப்பட்ட திரைப்பார்வையில் ஆகக்கூடிய ஆங்கில வார்த்தைகள் மேலோங்கி நிற்பதை காணலாம். Hi 🙂 என்கிற ஆங்கில தலைப்பிட்ட படத்திற்கு சுத்த தமிழிலா விமர்சனம் எழுதமுடியும்.😃 இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

கருத்துகள்