ஹைக்கூ !கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ !கவிஞர் இரா .இரவி ! தாகம் தணிக்கவும் தரிசு விளையவும் தண்ணீர் ! அன்று பொதுவுடைமை இன்றி தனியுடைமை தண்ணீர் !-- பயிர் வளரவும் உயிர் வாழ்வும் தண்ணீர் ! . கூடவோ குறையவோ இல்லை உலகில் உள்ள மூன்று பங்கு தண்ணீ ர் ! பிடிக்கவிடுவதில்லை பக்கத்துத் தெருவினரை தண்ணீர் ! நிலத்தில் குறைந்தால் பஞ்சம் நிறைந்தால் வெள்ளம் தண்ணீர் ! நாடுகள் அமைதியாக மாநிலங்கள் சண்டையோடு தண்ணீர் பகிர்வு ! உணவு உருவாகவும் உணவாகவும் தண்ணீர் ! மேலிருந்து கீழ் கீழிருந்து மேல் சுற்றுலா தண்ணீர் ! மனிதர்கள் மட்டுமல்ல உலக உயிர்கள் உயிர் வாழ தண்ணீர் !

கருத்துகள்