கண்ணகி நகரில் உள்ள மேனிநிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாலையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இவ்வகுப்புகள் பள்ளி முடிந்ததும் உடனடியாகத் தொடர்வதால் மாணவர்கள் பசியுடன் அச்சிறப்பு வகுப்புகளில் கலந்துகொள்வதைக் கேள்விப்பட்ட இறையன்பு அவர்கள், சென்ற ஆண்டு முழுவதும் அச்சிறார்களுக்கு மாலையில் சிறப்புச் சிற்றுண்டியை ஆதரவாளர்களின் நிதியுதவியுடன் ஏற்பாடு செய்திருந்தார். அது மட்டுமில்லாமல் இறுதித் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களின் இல்லத்திற்கும் சென்று அவர்களுக்கும், அவர்களது பெற்றோருக்கும் படிப்பின் அவசியத்தை உணர்த்தி ஊக்கப்படுத்தினார். இதுபோன்ற நிகழ்வுகளால் அப்பள்ளியின் தேர்ச்சி விகிதம் சென்ற ஆண்டு அதற்கு முந்தைய ஆண்டைவிட 19 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
அதேபோன்று நடப்புக் கல்வி ஆண்டிலும் மாலை வகுப்புகளை ஜூலை மாதம் முதல் அதன் தலைமை ஆசிரியை தொடங்க உள்ளார். சென்ற ஆண்டு போலவே இந்த ஆண்டும் அனைத்து வேலை நாட்களிலும் மாலை வகுப்பு மாணவர்களுக்குச் சிற்றுண்டி வழங்க வேண்டும் என்று விரும்பினார் முனைவர் இறையன்பு அவர்கள். இதற்காக ஒரு மாதத்திற்கு ஆகும் செலவை ராஜஸ்தான் அசோஷியேசனைச் சார்ந்த திரு அனில் கிச்சா அவர்களும், அவரது நண்பர்களும் ஏற்றுக்கொள்ள முன்வந்து 1,89,000 ரூபாய்க்கான காசோலைகளை வழங்கியுள்ளனர்.
மேலும் இந்த முயற்சிக்காக சென்னையைச் சார்ந்த திருமதி சங்கரா பார்வதி அவர்களும்1,00,000-க்கான காசோலையை அளித்துள்ளார்.
அந்தக் காசோலைகளை முனைவர் இறையன்பு அவர்கள் அரசு மேநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி ஆனந்தீஸ்வரி, உதவி தலைமை ஆசிரியை சித்ரலேகோ ஆகியோரிடம் முதல் தலைமுறை அறக்கட்டளை நிறுவனர் மாரிசாமி மூலம் ஒப்படைத்தார். அப்போது இளைஞர் சக்தியின் ஒருங்கிணைப்பாளர் திரு ஜோசப் ராஜாவும் உடனிருந்தார்.



கருத்துகள்
கருத்துரையிடுக