படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

ஏன் சிலர் அதிக எடை (Heavy Weight Lifting) தூக்கும் போது திடீரென மயங்கி விழுகிறார்கள்? சிலருக்கு ஏன் Cardiac Arrest கூட ஏற்படுகிறது? இன்று ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்ல பழக்கம். ஆனால், திடீரென தங்கள் உடல் திறனைவிட அதிக எடையைத் தூக்க முயற்சிப்பது சில நேரங்களில் ஆபத்தாக முடியும். குறிப்பாக, ஏற்கனவே தெரியாமல் இருக்கும் இதய நோய் இருந்தால், மிகக் கடுமையான உடற்பயிற்சி மயக்கம் அல்லது அரிதாக இதய நிறுத்தம் (Cardiac Arrest) ஏற்பட வழிவகுக்கலாம். மயக்கம் (Fainting) ஏன் ஏற்படுகிறது? பலர் அதிக எடை தூக்கும் போது மூச்சை அடக்கிக்கொண்டு (Valsalva maneuver) எடையைத் தூக்குகிறார்கள். இதனால் மார்புக்குள் அழுத்தம் (Intrathoracic pressure) அதிகரிக்கிறது. இதயத்திற்குத் திரும்பும் ரத்தத்தின் அளவு குறைகிறது. அதனால் சில விநாடிகளுக்கு மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து, திடீரென மயக்கம் ஏற்படலாம். எடையை விட்டவுடன் இரத்த அழுத்தமும் திடீரென மாறி மயக்கம் அதிகரிக்கலாம். இதயத் துடிப்பு ஏன் பாதிக்கப்படுகிறது? அதிக எடை தூக்கும் போது இதயத் துடிப்பும், இரத்த அழுத்தமும் மிகவும் அதிகரிக்கின்றன. ஆரோக்கியமான இதயம் இதைச் சமாளிக்கும். ஆனால், இதயத்தில் தெரியாமல் இருக்கும் குறைபாடு இருந்தால், இந்த திடீர் அழுத்தம் ஆபத்தான இதயத் துடிப்பு கோளாறுகளை (Arrhythmias) தூண்டக்கூடும். Cardiac Arrest ஏன் ஏற்படுகிறது? Cardiac arrest என்பது வெறும் "அதிக எடை தூக்கியதால்" மட்டும் ஏற்படுவதில்லை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அதற்கு பின்னால் ஏற்கனவே இருந்த இதய நோய் அல்லது இதய மின்சார அமைப்பு கோளாறு இருக்கும். உதாரணமாக, பிறவியிலேயே உள்ள இதய தசை தடிமன் (Hypertrophic cardiomyopathy), இதயத் தமனி அடைப்பு (Coronary artery disease), இதய மின்சார கோளாறுகள் அல்லது கட்டுப்பாடின்றி எடுத்துக்கொள்ளப்படும் செயல்திறன் அதிகரிக்கும் மருந்துகள் (Performance-enhancing drugs, anabolic steroids) போன்றவை ஆபத்தை அதிகரிக்கின்றன. வேறு காரணங்களும் உள்ளன உடலில் நீர்ச்சத்து குறைவு (Dehydration), உடலில் உப்புச் சத்துகள் (Electrolytes) குறைதல், போதிய தூக்கம் இல்லாமை, வெறும் வயிற்றில் கடுமையான உடற்பயிற்சி செய்தல், கஃபீன் அல்லது "Pre-workout" சப்ப்ளிமெண்ட்களை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வது ஆகியவையும் மயக்கம் அல்லது இதயத் துடிப்பு கோளாறுகளுக்கு காரணமாக இருக்கலாம். இதை எப்படி தடுக்கலாம்? உடற்பயிற்சி தொடங்குவதற்கு முன் என்ன என்ன பரிசோதனை செய்துகொள்வது நல்லது..என்பது பற்றி என்னுடைய subscription பக்கத்தில் குறிப்பிட்டுள்ளேன்.. கண்டிபாக அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்.. இப்படிக்கு உங்கள் மருத்துவர்.குணவதி MBBS MD.,

கருத்துகள்