கவிஞர் .இரா.இரவியின் ஹைக்கூ உலகம் ! நூல் ஆசிரியர் கவிஞர் பொன் .குமார் .சேலம் . நூல் மதிப்புரை கவிஞர் கவிஞர் கே.ஜி. ராஜேந்திர பாபு.பெங்களூர்

கவிஞர் .இரா.இரவியின் ஹைக்கூ உலகம் ! நூல் ஆசிரியர் கவிஞர் பொன் .குமார் .சேலம் . நூல் மதிப்புரை கவிஞர் கவிஞர் கே.ஜி. ராஜேந்திர பாபு.பெங்களூர் .9444040490. வெளியீடு வானதி பதிப்பகம் பக்கங்கள் 118. விலை 110.ரூபாய். 23.தீன தயாளு தெரு .தியாகராயர் நகர் .சென்னை .17 தொலைபேசி044 24342810 / 24310769 *** *** **** கவிஞர்.இரா.இரவியின் ஹைக்கூ உலகம் என்ற நூலை எழுதியவர் கவிஞர்.பொன்.குமார். பதிக்கப்பட்ட ஆண்டு 2025. “ பொன்.குமார் சேலத்துப் பெருமைகளில் ஒன்றானவர்…..பலரின் நூல்களைச் சேகரித்து மிகப்பெரிய நூலகம் வைத்துள்ளார். ஒவ்வொருவரின் பிறந்தநாளின் போது அவர்களின் நூல்களைப் பட்டியலிட்டு நூல் மதிப்புரையையும் மறக்காமல் பதிவிடுவது அவரின் வழக்கம்”-என்று கவிஞர்.இரா.இரவி தன்னுடைய நன்றியுரையில் குறிப்பிடுவார். பொன்.குமார் இந்நூலில் 15 கட்டுரைகள்; இரவியின் நேர்காணல் ஒன்றுண்டு. “கவிஞர்.இரா.இரவியின் ஹைக்கூக்கள் இணையத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டு உலகமெங்கும் வாசகர்களால் வாசிக்கப்படுகிறது. ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இரா.இரவி என்றாலே ஹைக்கூ நினவிற்கு வரும் அளவிற்கு அவரின் ஹைக்கூ பங்களிப்புகள் உள்ளன. கவிஞர்.இரா.இரவியைத் தவிர்த்து தமிழக் ஹைக்கூ வரலாறு எழுத முடியாது” என்று கவிஞர்.பொன்.குமார் தன்முன்னுரையில் மதிப்பீடு செய்துள்ளார். அவர் சொன்ன இன்னொரு கருத்தும் ஏற்புடையது. “ அவர் ( இரா.இரவி) விடும் மூச்சுப்போல ஹைக்கூவும் அவரிடமிருந்து வெளிவந்து கொண்டே இருக்கிறது” இரா.இரவி இதுவரி 5000-த்துக்கு மேற்பட்ட ஹைக்கூக்களை எழுதுயுள்ளதாக நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். “கல்லூரிக்குச் செல்லாத என் ஹைக்கூக்களைப் பல்கலைக்கழகம், கல்லூரிகளில் பாடத்திட்டத்தில் வைத்துள்ளனர். குறிப்பாக எனது மூத்த மகன் தீந்தமிழ் தியாகராசர் கல்லூரியில் BCA படித்தபோது எனது 10 ஹைக்கூக்கள் பாடத்தில் வந்தது கண்டு மகிழ்ந்தேன். இது என் வெற்றியல்ல. ஹைக்கூ வடிவத்தின் வெற்றி” என்றும் நேர்காணலில் பதிவிட்டுள்ளார் இரா.இரவி இந்நூலில் கவிஞர் இரா.இரவியின் 14 ஹைக்கூ நூல்களைத் தனித்தனிக் கட்டுரையாக எழுதி,அந்த நூலிலுள்ள ஹைக்கூக்களில் சிலவற்றைப் பதிவிட்டு அதற்குரிய பொருத்தமான விளக்கங்களை அளித்துள்ளார் கவிஞர்.பொன்.குமார். “சுதந்திரத்திற்காக போராடியவர்களுக்கும் சமூக முன்னேற்றத்திற்காக உழைத்தவர்களுக்கும் ஊரில் ஆங்காங்கே சிலைகள் வைக்கப்படுகின்றன. ஆனால் அவர்களைப் பொதுவாக தலைவராக பார்க்காமல் சாதித் தலைவராக அந்தந்த சாதிக்காரர்கள் பார்க்கத் தொடங்கி விடுகின்றனர். இதன் விளைவு நாட்டில் சாதிச் சண்டைகள் மரியாதைக்காக நிறுவப்பட்டவை சாதிச் சண்டைக்குத் துணையாய் தலைவர்கள் சிலைகள் --என்னும் ஹைக்கூ மூலம் மரியாதைக்காக நிறுவப்பட்டவை சிலைகள் என்றும் அவையே சாதிச் சண்டைக்குக் காரணமுமாகி விட்டன என்கிறார். சாதி வெறியர்களை சாடியுள்ளார்” என்று கவிஞர்.பொன்.குமார் எழுதியுள்ளது சிறப்பாக உள்ளது. ****** “சாண்பிள்ளை ஆண் பிள்ளை ஆதிக்கம் விதைப்பு” -என்னும் ஹைக்கூ மூலம் ஆணாதிக்கம் விதைக்கும் முயற்சி என எடுத்துக்காட்டியுள்ளார். பெண்களையும் உயர்த்தி பிடிக்க வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளார்” என்று கவிஞர்.பொன்.குமார் சொல்லியுள்ளதால் இரா.இரவியின் சிந்தனையும் பொன்.குமார் சிந்தனையும் ஒரே கோட்டில் செல்கின்றன என்பதை அறிகிறோம் ***** பிரிய மனமில்லை பிரித்தது காற்று மரத்திலிருந்துஇலை இலையுதிர் காலம் என்பது ஒரு பருவம். இலைகள் உதிரவே செய்யும். இருப்பினும் இலை பழுத்தாலும் காய்ந்தாலும் உதிரவே செய்யும். மரத்திலிருந்து இலை பிரிய மனமில்லாமல் தடுமாறும் வேளை காற்று பிரித்து விடுகிறது என்கிறார். இயற்கையின் நிகழ்வு என்றாலும் கவிஞர் காற்றைக் குற்றம் கூறியுள்ளார் என்று பொன்.குமார் விவரித்திருப்பது அருமை. இனி இரா.இரவியின் ஹைக்கூக் கவிதைகளில் ஓரிரண்டை என்னுடைய கண்ணோட்டத்தில் பார்க்கிறேன். படிப்பதை விட படைப்பதே சிறப்பு வரலாறு இரா,இரவி எழுதிய ஹைக்கூவில் எனக்குப் பிடித்த கவிதை இது அவர் வரலாறு இவர் வரலாறு தெரிந்து வைத்திருப்பதை விட நீயே வரலாறு படைக்க! என ஊக்கம் ஊட்டுகிறார். இது எல்லாத் துறைக்கும் பொருந்தும். இவரைப் போன்ற கவிஞர் உண்டா என வியப்பது போதாது நீயே கவிஞனாகு என மனஎழுச்சியை ஏற்படுத்துகிறார் இரவி. புதிய வீடு கட்டுகிறார். பூரிப்பாய் தூங்குகிறாரா இல்லையே. கடன் என்னும் கொசுவும், வட்டி என்னும் மூட்டைப்பூச்சியும் கடித்துக்கொண்டே இருக்கின்றன. இது பலரின் அனுபவம். இதை எழுதுகிறார் இரா.இரவி புதிய வீடு வரவில்லைஉறக்கம் வாங்கிய கடன். இவ்வாறாக ஏராளமான ஹைக்கூக்கள். கொட்டிக்கிடக்கும் காய்கறிகளில் ரொம்ப, ரொம்ப நல்ல காய்கறிகளைத் தேர்ந்தெடுத்துத் தந்துள்ளார் பொன்.குமார். மற்றவை நல்லவை அல்லவா எனக் கேட்டுவிடாதீர். எல்லாமே நல்லவைதான். அதில் ரொம்ப ரொம்ப நல்லவைகளைத் தேர்ந்தெடுத்து விளக்கம் தந்துள்ளார் கவிஞர்.பொன்.குமார். இரா. இரவியின் ஹைக்கூக்களைக், கவிஞர்.பொன்.குமார் விளக்கத்தோடு படிப்பது மேலும் ஆழத்தைத் தருகிறது. ஆழத்தில் மூழ்குங்கள் முத்துக்களை அள்ளலாம்.

கருத்துகள்