படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி

எழுத்தாளன் தனது உலகத்தை எழுத்துக்களில் கண்டு ரசிக்கிறான்... அதே நேரம் தனது தனிப்பட்ட வாழ்க்கையையும் அதே எழுத்துகளில் அழியாத கோலங்களாக எழுதி எழுதி அடக்கிவிட துடிக்கிறான் ! முடிக்க முடியாமல் முடிக்கிறான்! அவனுக்கு மட்டுமே உணரமுடிகிறது... அவன் எழுதிய எழுத்துக்களை வாசிக்க வேண்டிய முதல் ஜீவன் யாரென்று! எழுத்தாளன் எப்பொழுதான் எழுத முடியாமல் இருப்பான்! அல்லது தனது உயிர்ப்பான உள்ளத்துடிப்புகளை எழுதி கொண்டேயிருப்பானா? புரியாத பரம ரகசியம்! அவன் விரல்களும் மனமும் நேரமும் அவனுக்கு வேண்டிய ஏதோ முக்கியமான ஒன்றும் முடிவு செய்யலாம் ! இங்கே நமது ‌ஹைக்கூ கவிஞர் வரைந்துவைத்துள்ள வாழ்கைத் துணையுடனான பயணக் காவியத்தை எப்படி... எந்த மாதிரியான சூழலில் எழுத்துக்களாக உயிரும் மெய்யுமான மாண்புமிகு மனைவி எனும் உயிர் நூலினை நெய்து முடித்துள்ளார் என்பது கவிஞருக்கு மட்டுமே தெரிந்த மூடு மந்திரம்! கவிஞரின் புத்தகத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும் நண்பர்கள் வட்டத்தில் நானும் ஒருவன் என்பதை மௌனமாக எழுதிக்கொள்கிறேன்... அல்லது பதிவு செய்கிறேன்! இந்த நொடியிலிருந்து நூலினை வாசிக்க காத்திருக்கிறேன் வாடியிருக்கும் கொக்கு போல! அன்புடன் 🙏🏻 நண்பன் அ.கேசவராமன் தஞ்சை

கருத்துகள்