மன நோய், உடல் நோய் - மனநல பாதிப்பே மூலகாரணம்.
ஒவ்வொரு மனிதனும் இயற்கையின் அமைதி, மகிழ்ச்சி மற்றும் வளர்ச்சி என்ற சக்தியுடன் பிறக்கிறான். ஆனால் பிறந்த முதல் 7 ஆண்டுகளில், குழந்தை தனது பெற்றோரின் சிந்தனைகள், உணர்வுகள், பயங்கள் மற்றும் மன அழுத்தங்களை மிகவும் எளிதாக உள்வாங்கிக் கொள்கிறது.
7 வயதிற்கு முன் நடந்த பல சம்பவங்கள் நினைவில் இல்லாமல் போகலாம். ஆனால் 8 முதல் 13 வயது வரையிலான காலத்தில் நிகழும் அனுபவங்கள் மனதில் ஆழமான நினைவுகளாக பதியத் தொடங்குகின்றன. ஒரு மனக்குழப்பம் அல்லது வேதனை ஒருமுறை நடந்தால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் அதே மாதிரியான வேதனைகள் மீண்டும் மீண்டும் நிகழும்போது அது மன அழுத்தமாக (Stress) மாறுகிறது.
இந்த மன அழுத்தம் நீண்ட காலம் தொடரும்போது, மூன்று முக்கியமான சிந்தனை முறைகள் உருவாகின்றன.
1. கடந்தகால வேதனை சார்ந்த சிந்தனை (Depressive Thinking):
“ஏன் இது நடந்தது?”, “எனக்கு மட்டும் ஏன் இப்படியாகிறது?” என்று மீண்டும் மீண்டும் பழைய வேதனைகளை நினைத்து வாழத் தொடங்குகிறோம். இந்த சிந்தனை உடலின் செயல்பாடுகளை மந்தமாக்கி சோர்வு, ஆர்வமின்மை, மனச்சோர்வு போன்ற நிலைகளை உருவாக்கலாம். இவை 50 சதவீதம் அடையும் போது சர்க்கரை நோய், தைராய்ட் பிரச்சனைகள் என்று பலவித நோய்கள் உடலில் உருவாகின்றன. கவலை சிந்தனை 80 சதவீதம் கடக்கும்போது, Depression, Bipolar disorder போன்ற மனநல பிரச்சனைகள் உருவாகிறது.
2. பதற்றம் சார்ந்த சிந்தனை (Anxious Thinking):
“மீண்டும் இது நடந்தால் என்ன ஆகும்?”, “நாளை என்ன நடக்கும்?” என்ற எண்ணங்கள் அதிகரிக்கும்போது பதற்றம் அதிகரிக்கிறது. இது தூக்கமின்மை, செரிமான பிரச்சினைகள், வயிற்று கோளாறுகள், உடல் பதட்டம் போன்றவற்றை உருவாக்கலாம். 50 சதவீதம் கடக்கும் நிலையில் வயிறு சார்ந்த செரிமான பிரச்சனைகள், gastro Issues, ulcer, போன்ற உடல் நோய்கள் அதிகமாகிறது. அதுவே 80 சதவீதம் கடக்கும்போது anxiety disorder, obsessive compulsive disorder (OCD போன்ற மனநல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
3. பயம் சார்ந்த சிந்தனை (Fear Thinking):
வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்விகள் மற்றும் எதிர்மறை அனுபவங்களால், “நல்லது நடக்காது”, “என்னால் முடியாது”, “எல்லாம் தவறாகவே போகும்” என்ற பய அடிப்படையிலான சிந்தனை உருவாகிறது. இந்த பயம் அதிகரிக்கும்போது உடலின் அனைத்து அமைப்புகளும் பாதிக்கப்படலாம். குறிப்பாக உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படும், கிட்னி பிரச்சனை, heart , lung issues போன்ற உடல் பிரச்சனைகள் அதிகமாகும். பயம் உச்சகட்டத்தை அடையும் போது Schizophrenia என்ற மனசிதைவு நோய் உருவாகும்
அப்படியானால் தீர்வு என்ன?
இதற்கு தீர்வு Need based thinking.
என்ன நடக்கவேண்டுமோ அதை நடக்கிறதுபோல், நடந்ததுபோல் யோசித்தல் மனநலம் மற்றும் உடல்நலத்திற்கு சிறந்தது.
வாழ்க்கையில் என்ன நடந்தாலும், அதை நம் மூளை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். வெளியில் நடப்பதை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அதை எப்படி நினைக்க வேண்டும் என்பதை நாம் கட்டுப்படுத்த முடியும்.
நமது மூளைக்கு நல்ல சிந்தனைகள், மகிழ்ச்சியான அனுபவங்கள், வெற்றிக் காட்சிகள், நம்பிக்கையூட்டும் எண்ணங்கள் ஆகியவற்றை தொடர்ந்து கொடுக்க வேண்டும்.
கற்பனை (Imagination) என்பது மூளையின் மிகப்பெரிய சக்தி.
நாம் எதை மீண்டும் மீண்டும் கற்பனை செய்கிறோமோ, அதற்கான பாதையை மூளை உருவாக்கத் தொடங்குகிறது. அதனால் ஆரோக்கியமான வாழ்க்கை, நல்ல உறவுகள், வெற்றி, மகிழ்ச்சி ஆகியவற்றை மனதில் தொடர்ந்து உருவாக்குங்கள்.
அமைதியான மனம் ஆரோக்கியமான உடலை உருவாக்கும்.
நம்பிக்கையான சிந்தனை சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும்.
நமது சிந்தனையை மாற்றினால், நமது வாழ்க்கையையே மாற்ற முடியும்.
மனம் மாறினால் வாழ்க்கை மாறும்;
வாழ்க்கை மாறினால் எதிர்காலம் மலரும்.
உடல் நோய் மற்றும் மனநோயிற்கு தீர்வு உளவியல் சிகிச்சை மட்டுமே
நீங்களும் உளவியல் சிகிச்சை கற்று கொள்ளலாம்.
https://chat.whatsapp.com/HFCiRmb9KZyLYfgxZ6qVJA?mode=gi_t
Dr. Mehar Nithyan, PhD. (Psychology)
Director- Calmscious Psychotherapy Clinic
@918838428286 கு

கருத்துகள்
கருத்துரையிடுக