*மாணவர்களுக்கு மாலைச் சிற்றுண்டி*
கண்ணகி நகர் மேனிலைப் பள்ளி மாலையில் நடத்தும் சிறப்பு வகுப்புகளில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கான மாலைச் சிற்றுண்டி வழங்குதல் இன்று முனைவர் இறையன்பு அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. சிற்றுண்டி ஏற்பாடுகளை முதல் தலைமுறை அறக்கட்டளையின் நிறுவனர் திரு மாரிசாமி ஏற்பாடு செய்திருந்தார். பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி ஆனந்தீஸ்வரி முன்னிலையில் நடந்த இந்த நிகழ்வில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண் இயக்குநர் திருமதி ரமண சரஸ்வதி இ.ஆ.ப., எம்.ஆர்.எல். நிறுவனத்தின் மேனாள் தலைவர் திரு ராமலிங்கம், திரு ஜெகன், இளைஞர் சக்தியின் ஒருங்கிணைப்பாளர் திரு ஜோசப் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.



கருத்துகள்
கருத்துரையிடுக