வரலாற்று வானத்தில் வலம் வரும் தமிழ்! - கவிஞர் இரா. இரவி

வரலாற்று வானத்தில் வலம் வரும் தமிழ்! - கவிஞர் இரா. இரவி ***** மொழிகளின் வரலாற்றில் தமிழுக்கு தனி இடமுண்டு மொழிகளின் தாய்மொழி தமிழ் தரணி அறியும்! ஓர்எழுத்து சொற்கள் பல உண்டு தமிழில் ஓர் எழுத்து மாறினால் பொருள் மாறும் தமிழ் ! பழங்காலந் தொட்டே பட்டிமன்றம் கண்ட தமிழ் பார் போற்றும் புகழ் மிக்க மொழி தமிழ்! இலக்கியங்களின் களஞ்சியமாகத் திகழும் தமிழ் இனிய காப்பியங்கள் நிறைந்திட்ட தமிழ்! இணையத்தில் சிறந்திட்ட மொழி தமிழ் இளைஞர்கள் விரும்பிடும் மொழி தமிழ்! அருமை பெருமை மிக்க மொழி தமிழ் ஆன்றோர் சான்றோர் வளர்த்த மொழி தமிழ்! சங்கம் வைத்து வளர்த்திட்ட மொழி தமிழ் சங்கநாதம் முழங்குவோம் தமிழ் முதல்மொழி! உலகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கும் தமிழ் உலகநாடுகள் பலவற்றில் ஆட்சிமொழி தமிழ்! உலகப்பொதுமறையை உலகிற்கு தந்திட்ட தமிழ் உலகமே வியந்திடும் திருக்குறளின் மொழி தமிழ்! அறம் பொருள் இன்பம் பாடிய திருக்குறள் தமிழ் அறத்தை உலகிற்கு போதித்து சிறந்த தமிழ்! வீரத்தை உலகிற்கு உணர்த்திட்ட மொழி தமிழ் வீரத்திற்கு போருக்கு இலக்கணம் வகுத்த தமிழ்! வளங்கள் யாவும் தன்னகத்தே உள்ள தமிழ் வரலாற்று வானத்தில் வலம் வரும் தமிழ்!

கருத்துகள்