புகழ்வணக்கம்

வெக்கை' நாவலின் வெக்கையில் வீழ்ந்து அதைத் திரைப் படமாக்க முயன்ற பலரில் நானும் ஒருவன். நல்வாய்ப்பாக அதை இயக்குனர் வெற்றிமாறன் படமாக்கி தமிழ்நாட்டின் பெரும் ரசிகர் கூட்டத்தின் முன் படைத்தார். வெற்றிமாறன் இயக்கியதால் தனுஷ் , மஞ்சு வாரியார் நடிப்பில் நல்ல தொழில்நுட்ப கலைஞர்களோடு சிறந்த படைப்பாக அது வெளிவந்தது. *வெக்கை* *அசுரன்* ஆனது. வெக்கை, பிறகு, நைவேத்தியம் , அஞ்ஞாடி முதலிய நாவல்களையும் ஏராளமான சிறுகதைகளையும் தமிழுக்குக் கொடுத்தவர் *பூமணி*. கரிசல் மண்ணின் வாழ்க்கையை எந்த பூச்சும் இன்றி படைத்த யதார்த்தவாத எழுத்துக்கள் அவருடையவை. அதேபோல கரிசல் மண்ணின் வட்டார வழக்கை அச்சு அசலாக எழுத்தில் கொண்டு வந்தவர். சில திரைப்படங்களை இயக்கியும் இருக்கிறார். நேற்று இரவு மறைந்தார் என்று முகநூலில் தான் தெரிந்து கொண்டேன். எழுத்தாளர் பூமணி மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறேன். சாகித்திய அகடமி விருது வென்ற அவருக்கு அரசு மரியாதை அளிக்கிறது. தமிழ்நாடு அரசுக்கு நன்றி 🙏 * பிருந்தா சாரதி

கருத்துகள்