Subbu Lakshmi
அவருக்கு ஒரு வாய் சோறு கூட போடல.. பாக்யராஜ் இ*றப்புக்கு வராததற்கு இது தான் காரணம்- ஊர்வசி!!
பாக்யராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஊர்வசி, பாக்யராஜ் இ*றப்புக்கு வராதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து ஊர்வசியே விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் திரைப்படத்துறையின் மூத்த இயக்குநரும், நடிகரும், எழுத்தாளருமான கே. பாக்யராஜ், மாரடைப்பு காரணமாக ஜூன் 27 அன்று ம*ரணமடைந்தார். அவரது ம*றைவுக்கு திரைத்துறை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இறுதி அஞ்சலி செலுத்திய நிலையில், நடிகை ஊர்வசி அவரது மறைவுக்கு வரலில்லை. 1983-ல் பாக்யராஜ் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'முந்தானை முடிச்சு' திரைப்படத்தின் மூலம் தான் ஊாவசி தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனார்.
அதே சமயம், தனது குருநாதர் பாக்யராஜ் மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த அவர் வராதது குறித்து பெரும் கேள்விகள் எழுந்த நிலையில், இதற்கு பதில் அளித்து ஊர்வசி ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், நான் ஏன் வரவில்லை என்று மக்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள், ஆனால் அதற்குப் பின்னால் ஒரு காரணம் இருந்தது. நான் அங்கு சென்றிருந்தால், எல்லாரும் என்னிடமிருந்து ஒரு பேச்சை எதிர்பார்த்திருப்பார்கள்.
ஊடகங்களுக்கு முன்னால் என் துக்கத்தைக் காட்ட நான் விரும்பவில்லை, "என் சாரின் ஆ*ன்மாவிற்குத் தெரியும் நான் அவரை எவ்வளவு மதிக்கிறேன் என்று, அவரது குடும்பத்தினருக்கும் தெரியும். அதுவே எனக்குப் போதும்," நான் தனிப்பட்ட முறையில் பூர்ணிமா பாக்யராஜிடம் பேசி, பொதுவெளியில் துக்கம் அனுசரிக்காமல், தனிப்பட்ட முறையில் எனது இரங்கலைத் தெரிவித்தேன். பொதுவெளியில் இத்தகைய இழப்பைக் கையாளும் வலிமை எனக்கு இல்லை. கேமராக்களுக்கு முன்னால் உணர்ச்சிவசப்படவோ அல்லது ஒரு உணர்வுப்பூர்வமான நாடகத்தை உருவாக்கவோ எனக்கு எந்தத் தேவையும் இல்லை.
சிலர் இந்த உணர்வுகள் உண்மையானவை என்பார்கள்; சிலர் இந்த உணர்வுகள் போலியானவை என்பார்கள். அதுபோன்ற விவாதங்களுக்கு எந்த இடமும் இருக்கக்கூடாது என்று நான் விரும்பினேன். சில சமயங்களில் நம்மால் நம் சொந்த உணர்வுகளையே கட்டுப்படுத்த முடியாது. நான் எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றுதான் அவர் விரும்புவார். நான் அழுவதை அவர் ஒருபோதும் விரும்பியதில்லை. நான் அவரது இ*றுதிச்சடங்கிற்கு சென்றிருந்தால், உடைந்து போயிருப்பேன். அவரை அப்படி அங்கு பார்க்கும் வலிமை எனக்கு இல்லை.
என் இதயத்தில், அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார், சிரித்துக் கொண்டும், மகிழ்ச்சியாக உலா வந்து கொண்டும் இருக்கிறார். அப்படித்தான் அவரை நான் நினைவில் கொள்ள விரும்புகிறேன். ஒரு பனிப்பெட்டிக்குள் அவரைப் பார்க்க நான் ஒருபோதும் விரும்பவில்லை என்று ஊர்வசி உருக்கமான தெரிவித்துள்ளார். மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் பலருக்கும் சாப்பாடு கொடுத்திருக்கிறேன். ஆனால் ஒருமுறை கூட பாக்யராஜ் சாருக்கு சாப்பாடு கொடுக்கவில்லை. இப்போது எனக்கு அதே நினைப்பாக இருக்கிறது. ஒருவேளை அவர் தான் இப்போது ஆசைப்படுகிறாரோ என்னவோ என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

கருத்துகள்
கருத்துரையிடுக