கலைமாமணி கு ஞானசம்பந்தன் கருவூலம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை;கவிஞர் முனைவர் ஆ.மணிவண்ணன் காவல் கண்காணிப்பாளர் (பணிநிறைவு)

கலைமாமணி கு ஞானசம்பந்தன் கருவூலம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை;கவிஞர் முனைவர் ஆ.மணிவண்ணன் காவல் கண்காணிப்பாளர் (பணிநிறைவு) வெளியீடு வானதி பதிப்பகம் 23 தீனதயாளு தெரு,தியாகராயர் நகர்,சென்னை.6000017.தொலைபேசி 044 24342810/24310769 பக்கம் 68 விலை ரூபாய் 70 மின்னஞ்சல் vanathipathippakam@gmail.com வைகைப் பண்பாட்டை இன்றும் போற்றும் சோழவந்தான் தந்து புகழ்பெற்ற தியாகராசர் கல்லூரியின் தமிழ் பேராசிரியராக பணிநிறைவு பெற்று தமிழ்நாடு,இந்தியா மற்றும் உலகமென இலக்கிய மேடைகளை அலங்கரித்து கருத்தாழமிக்க கருத்துக்களைக் கூட இலகுவாக மனித மனதினுள் நிலைக்க நகைச்சுவையாய் தருகின்ற அய்யா தமிழுறவு முனைவர் கு ஞானசம்பந்தன் எழுதி வெளிட்ட ஒன்பது நூல்களுக்கு தமிழ் செம்மல் கவிஞர் இரா ரவி நூல்கள் வெளியிட்டவுடன் வழங்கிய கருத்துரைகளைத் தற்சமயம் நூலாகத் தொகுத்து. வெளியிட்டுள்ளார். புரட்சித் தலைவரை உலகம் சுற்றும் வாலிபன் என்றுச் சொல்வது போல் கு.ஞானசம்பந்தன் ஐயாவை உலகம் சுற்றும் பேராசிரியர் எனலாம். பணியிலிருந்த போதே ஓய்வு நேரத்தில் பட்டித் தொட்டியெல்லாம் சென்று தமிழ் வளர்த்தும் தமிழகத் திரைத்துறையில் நம் உலகநாயகன் கமல் உள்ளிட்ட பல முன்னணி திரைப்பட வரலாறு படைத்தவர்கள் உடன் நட்பு கொண்டு சில படங்களில் தோன்றி எங்களைப் போன்ற தமிழ்த் துறையில் பட்டம் பெறாத மாணாக்கர் பலருக்கு மானசீக மக்கள் பேராசிரியராக விளங்கியவர். இளைஞர்கள்,மாணவர்கள்மற்றும் சிறுவர் சிறுமியர் வாழ்வில் முன்னேற தான் கற்ற கல்வி மற்றும் அனுபவத்தை தந்த பேராசிரியர் எழுத்தக்களை ஆராய்வது என்பது நெல்லை இருட்டுக் கடை அல்வா இனிப்பானதா என்று ஆய்வு நடத்துவது போன்றது.அதுவும் கவிஞர் இரா.இரவிக்கு கேட்கவா வேண்டும்.அருமையாக கருத்துரைகள் வடித்துள்ளார். மேலும் கவிஞர் இரா இரவி அவர்கள் எழுதிய மூன்று நூல்களுக்கு பேராசிரியர் அவர்கள் தந்த அணிந்துரைகளையும் இந்நூல் கொண்டுள்ளது மிகவும் சிறப்பு. தமிழால் இணைந்த இருவரின் நூல்கள் சம்பந்தப்பட்ட நூல் என்பதால் நிறுத்தாமல் படித்தேன். நீங்களும் வாங்கிப் படியுங்கள். நகைச் சுவை குளத்தில் நீராடி புத்துணர்ச்சி அடையலாம்

கருத்துகள்