படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி.

வார்த்தைகளின் வலிமை🌺🌺 வார்த்தைகளுக்கு உயிரும் உள்ளது அதேபோல் ஒருவரை வலிமை ஆகவும் வல்லது..... ஒரு காலத்தில் வாழ்க்கையே சூன்னியமாகி போய்விட்டது. என்றும் என்ன செய்வது என்று புரியாமல் தவித்த போது சிறுமியாக இருந்த என் மகளின் ஒரு வார்த்தை தான் என் மனதுக்குள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.. நமக்காக இல்லை என்றால் நமக்கான கடமைகள் உள்ளன என்பதை புரிய வைத்தது. அந்த வார்த்தைகளின் வலிமைதான் என்னை வைராக்கியம் மிக்கவளாக மாற்றியது... அன்று துவக்கிய ஓட்டம் தான் இன்று வரை ஓடிக்கொண்டே இருக்கிறேன்,.. ஒரு சொல் உயிரோடு இருப்பவர்களையும் உடைத்து வாழ்வைசின்னாபின்னமாக்கும் வலிமையும் உடையது அதே ஒரு சொல் மெல்ல மெல்ல இறந்து கொண்டிருப்பவர்களுக்கு மீண்டும் உயிர் துடிப்பை கொடுத்து வாழ்விக்கும்... வல்லமையும் பெற்றது வார்த்தைகளில் கடுமையை காட்டி மனதை உடைப்பதை விட வார்த்தைகளில் அன்பை கூட்டி மனதில் நிற்பதே சிறப்பு... கல்லோ சொல்லோ வீசும் போதும் பேசும்போது மிகுந்த எச்சரிக்கை உடனே இருக்க வேண்டும்... கல் வீசப்படும் பொழுது உயிரைக் கொன்றுவிடும் சொல் கடுமையாக பேசும்போது உயிரோடு கொன்று விடும் அதனால் வார்த்தைகள் விதையைப் போன்றது எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்வோம்... வார்த்தைகளின் வலிமையில் அன்பையே விதைத்து அன்பையே அறுவடை செய்வோம்.... மிகவும் அருமையான தலைப்பினை தந்த திருமதி Jayabharathi Subramanian

கருத்துகள்