*மருதப் பாவரங்கம்* 4-7-2026
சிறப்புத் தலைப்பு
*வா.மு. சேதுராமனார்*
(பஃறொடை வெண்பா)
தமிழாசான் நற்பணியைத் தாம்செய்து அந்நாள்
தமிழ்வளர்த்த நல்லறிஞர் தாம்சேது ராமனாம்;
ஏற்றமுடன் செய்தார் இனிய கவிதைகள்
போற்றலுடன் பல்லோர் புகழ மரபினில்;
அந்நாள் தமிழ்ப்பணி யாம்இதழைத் தாம்நடத்திக்
கண்முன்னே பல்லோர் கவிதை எழுதவைத்தார்;
வல்லார் திருவள்ளு வர்கலை மாமணி
நல்விருது கள்தம்மை நானிலத்தில் பெற்றார்;
தமிழ்வாழும் காலமெல்லாம் தம்புகழ் பேசத்
தமிழ்வளர்த்தார் என்றல் தகவு!
*--இராம. பரஞ்சோதி*

கருத்துகள்
கருத்துரையிடுக