படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி.

மனநலபாதிப்பு, குற்றங்கள் - தமிழ் சினிமாவின் பங்கு கொலை, கொள்ளை, கற்பழிப்பு இல்லாத தமிழகம் உருவாக ஆட்சிமாற்றத்தை தாண்டி, தமிழ்சினிமாவில் மாற்றம் வேண்டும். ஒவ்வொரு தமிழ் படமும் கொலை, கொள்ளை, ஆபாசம் இவற்றையே முதன்மையாக வைத்து எடுக்கப்படுகிறது. ஏனென்றால் மனநலம் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும், பாதிப்பை சரிசெய்யாமல் Director ஆக வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். முடிவில் அவர்கள் எதில்எல்லாம் பதிக்கப்பட்டார்களோ அதை எல்லாம் சினிமாவாக மாற்றுகிறார்கள். பார்க்கும் ஒவ்வொரும் சிறுக சிறுக violence கற்றுகொள்கிறார்கள். ஒருநாள் அவர்களுக்கான இடத்தில் எதையெல்லாம் படத்தில் இயல்பாக பார்த்தார்களோ அதையெல்லாம் செய்யும் சூழல் உருவாகிறது. Social media மூலமாக நாம் பார்க்கும் குற்றங்கள் தாண்டி, உண்மையான குற்றம் ஒவ்வொரு வீட்டிலும் சீரியலினால் உருவாகிறது. சீரியலில், ஒவ்வொரு dialogue ம் நாம் மனித நேயத்தை இழந்துவிட்டோம் என்று ஊர்ஜிதம் படுத்தும் அளவிற்கு கொடுமையின் உச்சம். அறிவை ஊக்குவிக்காத படங்கள் மற்றும் TV சீரியல்கள் வெளிவரக்கூடாது என்பதில் சட்டசீர்திருத்தம் செய்தால் தமிழகத்தில் நடக்கும் குற்றங்களை கண்டிப்பாக குறைக்க முடியும். தவறை காட்டும் சீரியல்கள் எடுப்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு பட வெளியீட்டிற்கு முன்பும் உளவியல் குழு ஆலோசனை இருக்கவேண்டும். ஒவ்வொரு சீன் அதனோடு தொடர்புடைய வார்த்தை அதனால் பார்ப்போரின் மனநிலை இவற்றை ஆராய்ந்து படத்தை வெளியிட வேண்டும். இதெல்லாம் கடந்து நடிப்பு ஒரு தொழில்தான் இதனால் அவர்களின் அதிகப்படியான வருமானம், அவர்களின் luxury யான வாழ்க்கை முறை , சாதாரண மனிதனை அவர்களுக்கு அடிமையாக்குகிறது. அந்த படத்தில் என் தலைவன் செய்தான் நான் செய்வதில் தப்பில்லை என்று குற்றம் செய்ய தூண்டுகிறது. அதனால் நடிப்புத்துறைக்கு வருவோர் சமூக மாற்றங்களுக்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்ற கட்டாயமும் உருவாக்கப்பட வேண்டும். தமிழ்சினிமாவை அதிகம் பார்ப்பது கண்டிப்பாக மனநல பாதிப்பை உருவாக்கும். உங்கள் குடும்பத்தை சார்ந்தோர் மனநல பாதிப்பில் இருந்தால் உங்களால் உதவ முடியும். https://chat.whatsapp.com/HFCiRmb9KZyLYfgxZ6qVJA?mode=gi_t Dr. Mehar Nithyan, PhD. (Psychology) Director- Calmscious Psychotherapy Clinic @918838428286

கருத்துகள்