இசைக்குயில் ஜானகி என்றும் வாழ்வார்!
- கவிஞர் இரா. இரவி
*****
ஆந்திராவில் பிறந்து தமிழகத்தில் சிறந்து
கர்னாடகத்தில் மைசூரில் உயிர் பிரிந்தது
பதினேழு மொழிகளில் பாடி அசத்தினாய்
பன்மொழிப் பாடகியாக பவனி வந்தாய்
ராமமூர்த்தி சத்யவதி இணையருக்குப் பிறந்து
ரம்மியமான பாடல்கள் பாடி கொள்ளை கொண்டாய்
நாதஸ்வர மேதை பைடிசாமியிடம் இசை கற்றாய்
நாதலயம் முறைப்படி இசையினைக் கற்றாய்
வானொலி நடத்திய பாட்டுப் போட்டியில் வென்று
வென்ற பரிசை குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றார்
அன்னக்கிளி திரைப்படத்தில் இசைஞானி இசையில்
அனைத்துப் பாடல்களும் பெருவெற்றி பெற்றன
சிறந்த பாடகிக்காக தேசிய விருது 4 முறை பெற்றவர்
சிறந்த பாடல்களின் மூலம் உலகம் அறியப் பெற்றவர்
தாமதமாக வழங்கிய பத்மபூஷன் விருதை
தன்மானத்தோடு வாங்க மறுத்திட்ட வீராங்கனை
காலத்தால் அழியாத பாடல்களை பாடினாய்
காலகாலத்திற்கு என்றும் நிலைத்திருக்கும் உன்பாடல்
முறைப்படி இசைகற்ற காரணத்தால் பாடல்களில்
முத்திரை பதித்துப் புகழ்பல பெற்றுச் சிறந்தவர்
பக்திப் பாடல் காதல் பாடல் பாசப் பாடல்
பரவசப் பாடல் அனைத்துவகைப் பாடலும் பாடினார்
உனது பாடல் ஒலிக்காத நாளே இல்லை
உனது பாடல் எங்காவது ஒலித்துக் கொண்டே இருக்கும்
உடலால் உலகை விட்டு மறைந்திட்ட போதும்
பாடலால் உலகில் என்றும் வாழ்வது உறுதி!

கருத்துகள்
கருத்துரையிடுக