படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி

தமிழகத்தில் மலைகள் இல்லாத மாவட்டங்கள் : 1.கடலூர் 2.அரியலூர் 3. மயிலாடுதுறை 4.நாகப்பட்டினம் 5. திருவாரூர் 6. தஞ்சாவூர் 7. இராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் மட்டுமே மலைகள் கிடையாது... மற்ற 31 மாவட்டங்களில் மலைகள் உண்டு...... இதில் நீலகிரி கோயமுத்தூர் திருப்பூர் திண்டுக்கல் தேனி மதுரை விருதுநகர் தென்காசி திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைகள் உள்ளன...... KTCC வேலூர் திருப்பத்தூர் கிருஷ்ணகிரி தருமபுரி திருவண்ணாமலை விழுப்புரம் கள்ளக்குறிச்சி சேலம் நாமக்கல் ஈரோடு கரூர் பெரம்பலூர் திருச்சி புதுக்கோட்டை சிவகங்கை திண்டுக்கல் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கிழக்கு குன்றுகள் ( கிழக்கு தொடர்ச்சி மலைகள்) உள்ளன..... தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி - திருநெல்வேலி நெடுஞ்சாலையில் வல்லநாட்டில் சிறு மலை குன்றுகள் உண்டு...... சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரி பிரான்மலை பகுதிகளில் சிறு சிறு மலைகள் உள்ளது... மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள சதுரகிரி மலை மதுரை மாவட்டம் சாப்டூர் ஊராட்சியில் வரும்......... அரியலூர் மாவட்டத்தில் விக்ரமங்கலம் அருகே ஒரு செம்மண் மேடு உள்ளது அது மலை கிடையாது ஒரு செம்மண் மேடுதான் ♥️ புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் குடுமியான் மலை விராலிமலை பொன்னமராவதி பகுதிகளில் சிறு சிறு மலைகள் உள்ளது.... மலைகள் இயற்கையின் கொடை. நீர் ஊற்றுகளின் பிறப்பிடம். - Jkm shanmugam இயற்கையை காப்போம் .

கருத்துகள்