படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

வாசகப் பெருமக்களுக்கு வணக்கம்🙏🙏 பெரியார்:-ஆ.முத்துக்குமார் 2016 ஆண்டு எதேச்சையாக கண்ணில் ஒரு கிழவனின் படமும்‌ அந்த வசனமும் தெரிய விவரம் தெரியாத வயதில் அந்த வரிகள் எனக்குள் ஏற்படுத்திய மிகப்பெரிய நீண்டதொரு தேடலுக்கு பின் எனது அறையில் வசிப்பதற்கு அனுமதிப்பெற்ற இரண்டாவது நபர் அவர்.... "மதம் மனிதனை மிருகமாக்கும் சாதி மனிதனை சாக்கடையாக்கும்" பெரிய பெரிய தலைவர்களைப் பற்றி நாம் பல தகவல்களை கேட்டும் வாசித்தும் உள்ளோம் ஆனால் அவர்களுக்கும் பெரியார் அவர்களுக்கும் அதிக வேறுபாடு உண்டு.இங்கே பலருக்கு அதை ஒத்துக்கொள்ள முடியாவிட்டாலும் அதுவே உண்மை.... 1.பெரியாரின் பெற்றோர் 2.செல்லப்பாட்டி 3.பெரியாரின் துணைவியார் 4.பெரியார் சாமியார் ஆனார் 5.பொது வாழ்க்கை 6.வைக்கம் போராட்டம் 7.குருகுலப் போராட்டம் 8.தன்னாட்சிக் கொள்கை 9. இந்தி எதிர்ப்புப் போராட்டம் 10.வெளிநாடுகளில் பெரியார் 11.மணியம்மையார் 12. பெருமைக்குரிய பெரியார் என்பனவற்றிற்கமைய, கலகக்காரச் சிறுவனான அவர், பள்ளி செல்லும் போது தந்தையின் அறிவுரையை மீறி வாணிபச் செட்டியார் வீட்டில் உண்பது , சக மாணவர்களுடன் கைகலப்பு, ஒரு கட்டத்திற்கு மேல் ஆசிரியரையே அடித்து விட பள்ளி வாழ்க்கை முடிவிற்கு வருகிறது வளர்ந்த பின் நாகம்மையுடன் காதல் திருமணம். 2 வருடம் கழித்து பிறந்த பெண் குழந்தை 5 மாதத்தில் இறந்து விட மது மாது என்று அவரது வாழ்க்கைப்பாதை மாறுகிறது. கண்டிக்கும் தந்தையுடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். காசியில் புரோகிதர்கள் செய்யும் மோசடியை பார்த்ததும் தமிழ்நாட்டு பார்ப்பனர்கள் தீட்டு என்ற பெயரில் செய்யும் அடாவடித்தனங்கள் நினைவிற்கு வர காசி சலித்து விடுகிறது ஊர் திரும்பிய பிறகு மெல்ல வளர்ச்சி அடைந்து ஈரோடு நகரசபை தலைவராகிறார். அப்போது சேலம் நகர சபைத் தலைவராக இருக்கும் ராஜாஜியுடன் நட்பு ஏற்படுகிறது. அவரது வற்புறுத்தல் காரணமாக காங்கிரஸில் இணைகிறார் வகுப்பு வாரி தீர்மானத்தை காங்கிரஸ் ஆதரிக்காததால் அக்கட்சியில் இருந்து வெளியேறுகிறார். அதன் பிறகு சுயமரியாதை சமதர்ம கட்சியை உருவாக்குகிறார். இடையில் விடுதலை பத்திரிகை வேறு. நீதிக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். பின்னர் அதன் பெயரை திராவிட கழகம் என மாற்றுகிறார். கழகத்தினர் கறுப்பு சட்டையை அணிய வலியுறுத்துகிறார் அப்போதைய இந்து சட்ட விதிகளின் படி ஒரு பெண்ணை வாரிசாக தத்தெடுக்க முடியாது மாறாக மனைவியாக்கி கொண்டால் வாரிசாகி விடலாம் எனவே சொத்துக்கும் கட்சிக்கும் வாரிசு தேவை என்பதற்காக மட்டுமே மணியம்மையை மணந்து கொள்கிறார் அதிருப்தியாளர்கள் ஒன்று கூடி திராவிட முன்னேற்றக் கழகம் உருவாகிறது. அண்ணாதுரை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். பெரியார் மீதிருக்கும் மரியாதை காரணமாக தலைவர் பதவியை காலியாகவே வைத்து விடுகின்றனர் அண்ணாதுரைக்கும் இவருக்குமான கருத்து வேறுபாடு, அண்ணாதுரை இறந்த பிறகு கருணாநிதியை தேர்ந்தெடுப்பது, அதன் பிறகு திராவிட நாடு கொள்கை, இந்தி எதிர்ப்பு, திராவிட விவசாய தொழிலாளர் சங்கம், குலக்கல்வி திட்ட எதிர்ப்பு. இன்னும் பல. ஆனால் எந்த இடத்திலும் அவர் பார்ப்பன எதிர்ப்பை கைவிடவேயில்லை. ஜாதிக்கு எதிராகக் குரல் கொடுத்து கொண்டே தான் இருந்திருக்கிறார். இப்படியே வாழ்க்கை முழுவதும் மக்களுக்காகப் போராடி 24.12.73 ல் மறைகிறார். இந்த நூலில் தரப்பட்டுள்ள கட்டுரைகள் சமூக நீதி பற்றிய புரிதலுக்கானது. ஜாதிய ஏற்றத்தாழ்வு, வகுப்புரிமை, சமூக நீதி வரலாறு, இட ஒதுக்கீடு, தகுதி திறமை, பார்ப்பனியத்தின் கொடுமைகள், காந்தியார் காங்கிரஸ் செயல்பாடு, பிராமண சங்கங்களின் செயல்பாடு, திராவிடர் கழகத்தின் நடவடிக்கைகள் இப்படி பல. இந்த விஷயங்களில் தந்தை பெரியாரின் சிந்தனையும் தெரிகிறது. அவரது சினமும் புரிகிறது. ஒரு தனிமனிதனாக, இத்தனை எதிரிகளையும் சமாளித்து - சமரசம் காணாத சமத்துவ சிந்தனையாளராக பார்க்க முடிகின்றது. ' பெரியார் என்ன செய்து கிழித்தார் ' என்று கேட்கின்ற அறிவிலிகளுக்கு - இந்த நூலில் உண்டு அறிவார்ந்த பதிலடி ! பெரியார் ஒரு சகாப்தம் படியுங்கள் மக்கள் மன்னனுக்கு அடக்கம் மன்னன் கடவுளுக்கு அடக்கம் கடவுள் மந்திரத்துக்கு அடக்கம் மந்திரம் எங்களுக்கு அடக்கம் அதனால் அனைவரும் எங்களை போற்றி எங்கள் பின் வாருங்கள் நாங்கள் சொல்வதே வேதம் என்ற ஆரியத்தை புரிந்து கொள்ளுங்கள்... இது பாசிச சிந்தனை என்றாலும் சமுகத்திற்கான சிந்தனை. இங்கே எல்லோருக்கும் ஜாதி உணர்ச்சி இருக்கிறது.நீங்கள் அதை சௌகரியமாக மறைத்துக் கொள்ள சகல வித்தைகளும் செய்கின்றீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் ஏதோ மற்றவர்க்கு தான் ஜாதி உணர்ச்சி இருப்பதாக கற்பித்துக் கொண்டிருக்கின்றீர்கள். ஆனால் இது கீழானது அவமானகரமானது இதை எதிர்த்து ஒரே ஒரு கல்லையாவது வீசுங்கள் இளைய தலைமுறையினருக்காக! சாதி என்பது சமூகத்தில் தன்னை மற்றவரிடமிருந்து அறிவால் உணவு பழக்கங்களால் அந்தஸ்து மற்றும்ஒழுக்க நெறிமுறைகளால் வேறுபடுத்திக் காட்டிக்கொள்ள நினைப்பதே இது ஒருவகையான தீண்டாமையின் உச்சம். இதை ஒழிக்க பெரியார் அம்பேத்கர் பெரும் முயற்சி செய்தார்கள் ஆனால் இது பல நூறு வருடகட்டமைப்பு மாற்றமுடியாதது என்பது நிதர்சனம். ஆனால் அதில் ஏதோ அறிவுள்ள கூட்டம் இந்த கேவலத்தில் இருந்து தன்னை மாற்றிக் கொண்டு முன்னே நகர்ந்து சென்றுள்ளதும் நிதர்சனமே.... நம்மைவிட படித்துமுன்னேறிய வெளிநாடுகளில் இவை நிறத்தால் பிரிக்கப்படுகிறது.அவ்வளவு தான் ஆப்பிரிக்க அமெரிக்க ஆஸ்திரேலியா நாடுகளில் நிறவேற்றுமை பிரச்சினை இப்பவரை தீரவேயில்லை... அதேப்போல தான் இந்த குப்பையும்.... பெரியாரிய கொள்கைகளை சிலர் எவ்வளவு மோசமாக விளங்கியுள்ளனர் என்பது இங்கே தெளிவாகிறது. ஒரு காலத்தில் வேதத்தைப் படிக்காதே என்று தடைப் போட்டவர்கள் தற்போது பெரியாரைப் படிக்காதே என்று தடையிட்டுள்ளார்களோ? எதையும் படியுங்கள். படிக்கச் சொல்லுங்கள். அதில் தவரு இருந்தால் அதை கண்ணியமாக விமர்சியுங்கள். படிக்காமலேயே வன்மத்துடன் பேசாதீர்கள். "யார் மனதையும் புண்படுத்துவதற்கு நோக்கமல்ல" பின்குறிப்பு:-இதில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் எனது‌ தனி விருப்பு சார்ந்தது.

கருத்துகள்