படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

Mehar Nithyan என்னிடம் உளவியல் சிகிச்சைக்காக வந்த ஒரு நபர் கடந்த ஐந்து ஆண்டுகளாக கடுமையான மனச்சோர்வில் (Depression) இருந்தார். அந்தக் காலத்தில் அவர் தனது பெற்றோர் இருவரையும் இழந்திருந்தார். அதோடு கடுமையான பொருளாதார நெருக்கடியும் அவரை பாதித்திருந்தது. அதன் விளைவாக வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை, வாழ்க்கையில் மகிழ்ச்சியை உணர முடியவில்லை, எந்தச் செயலிலும் ஆர்வம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்தார். அவருடைய மனநிலையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது, அவரது உடல்நிலையைப் பற்றியும் கேட்டேன். ஏனென்றால் depression symptoms இருப்பவர்களுக்கு diabetes & thyroid இருக்க வாய்ப்புண்டு. ஆனால் அவர் சமீபத்தில் பல் மருத்துவரை சந்தித்ததாக கூறினார். பற்கள் ஆடுவதால் எடுக்கப்பட்ட ஸ்கேனின் அடிப்படையில், முழு பற்களையும் அகற்றி Implant செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்கள். அதற்கான செலவு சுமார் ₹6–7 லட்சம் ஆகும் என்பதால் அவர் மிகவும் பதற்றத்திலும் கவலையிலும் இருந்தார். உடனடியாக அந்தச் சிகிச்சையை மேற்கொள்வதற்கு பதிலாக, முதலில் அவரது மனஅழுத்தத்தையும் மனச்சோர்வையும் குறைப்பதில் கவனம் செலுத்தலாம் என்று பரிந்துரைத்தேன். முதல் சில அமர்வுகளில் அவரது மனநிலையை நிலைப்படுத்தவும், மனஅழுத்தத்தைக் குறைக்கவும், உணர்ச்சி வலிமையை அதிகரிக்கவும் உளவியல் சிகிச்சை வழங்கப்பட்டது. அதன் பிறகு, வழிநடத்தப்பட்ட சிந்தனை பயிற்சிகள், காட்சிப்படுத்துதல் (Guided Visualization), தளர்வு பயிற்சிகள் (Relaxation Techniques), மற்றும் நேர்மறை மனப்பயிற்சிகள் மூலம் தனது உடல் ஆரோக்கியம் மேம்பட்டு வருவதாகவும், பற்கள் வலிமையாக இருப்பதாகவும் அவர் மனதில் தெளிவாக கற்பனை செய்யும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. நோக்கம், உடலைப் பற்றிய பயத்தை குறைத்து, நம்பிக்கையையும் மன அமைதியையும் அதிகரிப்பதாகும். சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு, அவரது மனநிலை குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டது. அதன் பின்னர், வேறு ஒரு பல் மருத்துவரிடம் மீண்டும் பரிசோதனை செய்து ஆலோசனை பெறுமாறு கூறினேன். புதிய பரிசோதனையின் அடிப்படையில், பற்கள் வலுவாக இருப்பதாகவும், பற்களை அகற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார்கள். இதனால் அவர் மிகப் பெரிய செலவையும் மனஅழுத்தத்தையும் தவிர்க்க முடிந்தது. நீண்டகால மனஅழுத்தமும் மனச்சோர்வும், உடல்நலப் பிரச்சினைகளை நாம் உணரும் விதத்தையும், அவற்றை எதிர்கொள்ளும் திறனையும் பாதிக்கக்கூடும். அதே நேரத்தில், உளவியல் சிகிச்சை என்பது மனபலத்தை கூட்டி subconscious mind என்று சொல்லக்கூடிய ஆழ்மனதில் ஒரு குறிக்கோளை உருவாக்கி அதில் அவர்களை ஈடுபடுத்த பழகும்போது தேவையற்ற கவலை, பயம், பதற்றத்தில் இருந்து வெளியேறி விடுகிறார்கள். நாம் இயல்பாகவே நம்மை புதுப்பித்து கொள்ளும் திறன் கொண்டவர்கள். மன நிம்மதியும் மகிழ்ச்சியும் நம்மை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. நமக்கென்று குறிக்கோள் இல்லாத பட்சத்தில் நம் மனம் பலத்தை இழக்க நேரிடும், அதனால் அடுத்தவர்களின் குறிக்கோளில் நீங்கள் மாட்டிகொள்வீர்கள். யாரும் உங்களை பாதுகாக்க இல்லை, அவரவர்கள் வாழவே இந்த வாழ்க்கை. மருத்துவம் சார்ந்த எதுவும் உங்களை காப்பாற்றும் என்பது நம்பிக்கை மட்டுமே. உண்மை உங்களுக்குள் இருக்கும் அதிசயத்தை நீங்களே உணரும்போதுதான். இயற்கை அற்புத சக்தி கொண்டது, உங்களுக்கு எதுவும் ஆகாது, மனிதனை நம்பாது இருக்கலாம், ஆனால் இயற்கையை நம்பியே ஆக வேண்டும். உங்களை பாதுகாப்பதே இயற்கையின் முதல் கடமை. நீங்கள் 120 வருடமும் ஆரோக்கியமாகத்தான் இருப்பீர்கள். நீங்கள் வாழவே வந்தீர்கள், இயற்கையின் அற்புத்த்தை அனுபவிக்கவே வந்தீர்கள். எல்லாவித மகிழ்ச்சியும் உங்களுக்கு கிடைத்தே ஆக வேண்டும். அதற்கு நமக்குள் இருக்கும் மனதை வலுப்படுத்த வேண்டும். சர்க்கரை நோய், இதய நோய், சிறுநீரக நோய், புற்றுநோய் போன்ற நீண்டகால உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்களும், உளவியல் சிகிச்சைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும், அப்படியெனில் மனநிலையிலும் வாழ்க்கைத் தரத்திலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அனுபவிக்க முடியும். உடலை குணப்படுத்துவது மட்டுமல்ல, மனதையும் குணப்படுத்த வேண்டும். மனம் அமைதியாகும் போது, வாழ்க்கையையும் ஆரோக்கியத்தையும் நாம் புதிய கோணத்தில் பார்க்கத் தொடங்குகிறோம். பல நேரங்களில், அதுவே குணமடையும் பயணத்தின் மிக முக்கியமான தொடக்கமாக அமைகிறது. July 10th மாலை 8 மணியளவில் ஆரம்பிக்கும் எனது Calmscious பயிற்சியில் பங்கு கொள்ளுங்கள். உங்களின் மனபலமே உங்கள் ஆரோக்கியம் என்பதை உணர்வீர்கள் https://chat.whatsapp.com/DrOLO4MKUVT0KcCrmD7600?mode=gi_t Dr. Mehar Nithyan, PhD. Psychology Director - Calmscious Psychotherapy Clinic @918838428285

கருத்துகள்