படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

*மதுரை முரளி* *பன்முக எழுத்தாளர்* மதுரை. செல்: 98429 63972 என் இனிய நண்பர் ஹைக்கூ இரா.இரவி அவர்களின் இரு புத்தகப் படைப்புகளும் " ஹைக்கூ விருந்து" மற்றும் "இளமை இனிமை புதுமை" கருத்துரை வழங்க எனக்கு வாய்ப்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றி..🙏🙏. நண்பனின் புத்தகப் பயணம் விரைவில் அரைச் சதம் அடைய எல்லாம் வல்ல மதுரை மீனாட்சி சொக்கநாதரை வேண்டி வாழ்த்துகிறேன்.. வயதில்லாமல்! 1. முதல் புத்தகம் " *ஹைக்கூ விருந்து"* இதோ சில கவிதை கருத்துப்பதிவுகள் என் பார்வையில்... 1.மழையின் மகத்துவத்தை மனதிற்குள் பதித்தது.. " சோலைகள் சாலைகளாகின கேள்விக்குறியானது மழை..!" முற்றிலும் வேதனையான உண்மை...👏👏 2. இயற்கையின் இரவு விளக்காய் மின்மினி ...கவிதை..👌 "மின்தடையில்லை ஒளிர்ந்தபடி மின்மினி...!" 3. "சுவரில் எழுதாதே! சுவர் முழுவதும் எழுதியிருந்தது..." ஒர் நல்ல நகைச்சுவை உணர்வோடு கவிதைப்பதிவு...👏👏 4. "மரணித்தன மலர்கள் மலர் வளையம்." ஓர் சோகத்துக்குள்.. சோகம்..👌 5. "கோலத்தை விட கொள்ளையழகு கோலமிட்டவள். ரசனையோ ரசமே!!" இப்படி ...இன்னும். இரசிப்பு கவிதைகள். இந்நூல் படைத்திட்ட என் இனிய நண்பருக்கு வாழ்த்துக்கள் பல. பாராட்டுக்கள் பலப்பல....👏👏👏 அடுத்ததாக... *இரண்டாவது* *புத்தகம்* . " *இளமை இனிமை* *புதுமை* " இதோ என் கருத்து பதிவுகள்... 1. நண்பரின் தமிழ்க்காதல் எனக்கு ரொம்ப பிடித்தது...😇 "காதல் " "நெடிலில் தொடங்கி மெய்யில் முடியும் மெய் காதல்!" 2. நாத்திகத்தில் ஆத்திகம்!..🤪 " சொர்க்கம் நரகம் நம்பாத நாத்திகன் நான் ! அவளைச் சந்தித்ததும் நம்பினேன் சொர்க்கத்தை." 3. வெற்றி தோல்வி எது சிறந்தது?..💐 "காதல் வெற்றியை விட காதல் தோல்வி தான் கவிதை வளர்க்கின்றது." 4. புத்தரின் போதனையில் எனக்கு போதை இல்லை...🤪 "ஆசையை அறவே அழி"என்ற புத்தர் போதனை பிடிக்கவில்லை. அதனால் புத்தரையும் பிடிக்கவில்லை!" 5. அடடா... ஓர் அழகு வர்ணனை...😇😍👍 என்னவள்! " நடந்து வரும் நந்தவனம்! நடமாடும் நயாகரா! மண்ணில் உள்ள சொர்க்கம் ! மாறாத நிரந்தர மார்கழி! இப்படி... இன்னும். காதலை இரசமாய் ருசிக்க வைத்த என் இனிய நண்பருக்கு நன்றியும் , பாராட்டுகளும். அடுத்த வர இருக்கும் அவரது படைப்புகளுக்கு ஓர் *ரசிகனாய்* காத்திருக்கும். என்றும் நட்புடன். *மதுரை முரளி* பன்முக எழுத்தாளன்.

கருத்துகள்