நூறாண்டு கடந்தும் பாவாண்ட பாரதி! கவிஞர் இரா. இரவி

நூறாண்டு கடந்தும் பாவாண்ட பாரதி! கவிஞர் இரா. இரவி மகாகவி என்றால் மண்ணில் பாரதி தான் மகாகவி பட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமானவன் ! பாடிய பாடலுக்கும் வாழ்க்கைக்கும் வேறுபாடு இல்லை பாடியபடியே வாழ்ந்து சிறந்தவன் பாரதி! வறுமையிலும் செம்மையாக வாழ்ந்தவன் பாரதி வறுமைக்கு அஞ்சாமல் போரிட்டு வாழ்ந்தவன் பாரதி ! சொற்களின் சுரங்கமாகத் திகழ்ந்தவன் பாரதி சொக்க வைக்கும் பாடல்களை தினமும் யாத்தவன்! விடுதலை வேள்வியை கவிதையால் நிகழ்த்தியவன் விடுதலை வேட்கையை பாட்டால் விதைத்தவன் முண்டாசு கட்டி முத்தமிழை வளர்த்தவன் பாரதி முன்கோபம் வந்தாலும் குணமிக்கவன் பாரதி ! காந்தியடிகளை அழைத்து வேறு கூட்டம் என்றதும் கோபிக்காமல் திட்டமிட்ட நாளில் நடக்கும் என்றவன் ! காந்தியடிகளை வாழ்த்தி கவி வடித்தவன் பாரதி காந்தியடிகளை காத்திடச் சொன்ன புலவன் பாரதி ! செல்லம்மாளின் செல்லக் கணவன் பாரதி செல்லம்மாவிற்கு சிரமங்கள் பல தந்தவன் பாரதி ! பெண் விடுதலை மண் விடுதலை பாடியவன் பாரதி பெண் புதுமைப்பெண் பாட்டில் வடித்தவன் பாரதி ! எட்டயபுரத்தில் பிறந்த எட்டாத உயரம் சென்றவன் பாரதி எண்ணியதை எண்ணியபடி வாழ்ந்து உயர்ந்தவன் பாரதி ! நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறான் பாரதி நுட்பமான பாடல்களில் என்றும் வாழ்வான் பாரதி !

கருத்துகள்