படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

படித்ததில் பிடித்தது* ஹைக்கூ திலகம் அய்யா கவிஞர் இரா.இரவி அவர்களின் நட்பு கிடைக்கப்பெற்றதை பெருமையாக கருதுகிறேன். அவர்தம் எழுதிய படைப்புகளில் ஒன்றான *இளமை இனிமை புதுமை* கவிசோலை படித்தேன். ஐம்பத்தாறு தலைப்புகளில் இன்பத்தேனை இட்டு வாசகர்களுக்கு கவி-விருந்து வைத்திருக்கிறார். அதிலும், *உண்மை காதல் ஒரு வழிப் பாதை* *யுத்தம் செய்யும் கண்கள்* சிறப்பு விருந்து. மற்றும் *தனிமையோடு பேசுங்கள்* இன்றைய தலைமுறையினர் அவசியம் வாசிக்கவும் பின்பற்றவும் வேண்டிய வரிகள். எனை ஈர்த்த இருவரிகள்: புவிஈர்ப்பு விசை எல்லோருக்கும் பொது, பாவையின் விழி ஈர்ப்பு விசை எனக்கு மட்டும். விஞ்ஞானிகளுக்கு வேண்டுகோள்: விழிகளில் மின்சாரம்...!

கருத்துகள்