Nithya Eraiyanbu
கணவர் Version 1.0 – Default Settings!
⚠️ Factory Settings – மாற்ற முடியாது!
1. Mop போடும்போது மட்டும் குறுக்கே மறுக்கே நடப்பது... (மற்ற நேரம் இன்ச் கூட நகர மாட்டார்கள்! 🤭)
2. பாட்டிலில் தண்ணீர் நிரப்பும்போது பாதியை கீழே கொட்டிவிட்டு, "துடைக்கிறேன்" என்று சொல்லி துவம்சம் செய்வது.
3. டிவியை Full Volume-ல் ஓடவிட்டு, அதே நேரத்தில் மொபைலையும் பார்த்துக் கொண்டிருப்பது.
4. விடுமுறை நாட்களில் அரை டசன் டீ கேட்டு வீட்டையே டீக்கடையாக்குவது.
5. மனைவி அழைத்தால் பிஸியாக இருப்பது போல நடிப்பது... ஆனால் WhatsApp Group-களில் மட்டும் செம ஆக்டிவ் ஆக இருப்பது.
6. ₹5-க்கு கறிவேப்பிலை வாங்கச் சொன்னால், ஆறு மாதத்துக்குச் சேர்த்து வாங்கி வந்து, "தொக்கு பண்ணிக்கோ!" என்று இலவச ஆலோசனை வழங்குவது.
7. "எது எங்கே?" என்று கேட்டு, கையில் இருக்கும் பொருளையே ஐந்து நிமிடம் தேடுவது.
8. சாப்பிட்ட தட்டை சிங்க் வரை எடுத்துச் சென்று, சிங்க்குள் மட்டும் வைக்காமல் பக்கத்தில் வைத்துவிடுவது.
9. "நான் Help பண்றேன்" என்று சொல்லி, ஒரு பொருளை மட்டும் நகர்த்திவிட்டு, முழு கிரெடிட்டையும் வாங்கிக்கொள்வது.
10. ரிமோட்டை NASA விஞ்ஞானி மாதிரி கண்டுபிடிப்பார்கள்... ஆனால் சாக்ஸை மட்டும் கண்டுபிடிக்க முடியாது!
11. வெளியே கிளம்பும் நேரத்தில்தான் "என் சாவி? பர்ஸ்? பெல்ட்?" என்று அவசர தேடுதல் வேட்டை ஆரம்பிப்பது.
12. வீடு முழுக்க லைட்டை எரியவிட்டு, EB Bill வந்ததும் "இவ்வளவு எப்படி வந்துச்சு?" என்று விசாரணைக் கமிஷன் நடத்துவது.
13. கடைக்குப் போய் இரண்டு பொருள் வாங்கச் சொன்னால், தேவையில்லாத பத்து பொருள் வாங்கிவிட்டு, சொன்ன ஒரு பொருளை மறந்து வருவது.
14. காரை ஒரு மணி நேரம் பளபளன்னு துடைப்பார்கள்... ஆனால் டைனிங் டேபிளை இரண்டு நிமிடம் துடைக்க மனசு வராது.
15. எந்தப் பொருளும் கிடைக்கவில்லை என்றால், "வீட்ல யாரும் எதையும் ஒழுங்கா வைக்க மாட்டீங்களா?" என்று கேட்பார்கள்... ஆனால் அந்தப் பொருள் அவர்கள் வைத்த இடத்தில்தான் இருக்கும்!
16. மறக்காமல் ஈர டவலை கட்டில் மேல் போட்டு வைப்பது..
இதில் எத்தனை Point உங்களுக்கு / உங்கள் வீட்டுக்காரருக்கு பொருந்துகிறது? 😜👇

கருத்துகள்
கருத்துரையிடுக