Easty Stephen
கடவுள் நம்பிக்கை, கொண்ட அன்னை தெரேசாவும் 87 வயது வரை இந்தியாவில்தான் வாழ்ந்தார்..
கடவுள் இல்லவே, இல்லை, என்று சொன்ன, பெரியாரும், 94 ஆண்டுகள் வரை இந்தியாவில்தான் வாழ்ந்தார்…
கடவுள், நம்பிக்கை கொண்ட, அன்னை தெரேசாவும், கடவுள் நம்பிக்கையற்ற பெரியாரும் இறந்தும் இருவரும் போற்றப்படுகிறார்…
இவர்கள் இருவரும் எத்தனை காலம், வாழ்ந்தார்கள் என்பதோ? அல்லது கடவுள் ஏற்பாளர்களா? அல்லது கடவுள் மறுப்பாளர்களாக வாழ்ந்தார்களா? என்பது நமக்கு தேவையில்லை…
மதம் என்பது மனிதனால் உருவாக்கப் பட்டது… மனிதநேயம் என்பது மனிதனுக்கு இயல்பாக இருக்க கூடிய நற்பண்புகளில் ஒன்று…
ஆகவே, ஒருவர் கடவுள் ஏற்பாளரா? அல்லது கடவுள் மறுப்பாளரா? என்பது முக்கியமல்ல…
கடவுள் மறுப்பாளர் பெரியார் மற்றும் கடவுள் ஏற்பாளார் அன்னை தெரேசா இருவரும் மனிதநேயம் எனும் ஒரே நோக்கத்தில் பயணம் செய்தவர்கள்…
கடவுள் என்பதை விட மனிதநேயம் என்பதே கண்ணால் காணும் கடவுள்… மனிதநேயத்தை நேசிக்கும் ஒருவர் இறந்தாலும், மக்கள் மனதில் வாழ்வார் என்பது இந்த இருவரும் உறுதி செய்கிறார்கள்…
உலகில் வாழும் நாட்கள் குறைவு… பிறக்கும் போதும் எதையும் எடுத்து வரவில்லை…
போகும் போதும் எதையும் எடுத்து செல்ல போவதுமில்லை…
உலகில் வாழும் இடைப்பட்ட காலத்தித்தில் அன்னை தெரேசா மற்றும் பெரியார் போல சுயநலம் அற்றவர்களாக, பொதுநல குணமான மனிதநேயத்தோடு வாழ்ந்து, இறப்பினும் உலகில் பயணம் செய்வோம்…👌❤️
Easty Stephen
பதிவு 11-12-2021 (5 ஆண்டுக்கு முன்னைய பதிவு…
Link பின்னோட்டத்தில்


கருத்துகள்
கருத்துரையிடுக