இசைக்குயில் ஜானகிக்கு மறைவே இல்லை! - கவிஞர் இரா. இரவி

இசைக்குயில் ஜானகிக்கு மறைவே இல்லை! - கவிஞர் இரா. இரவி ***** நாற்பத்தெட்டாயிரம் பாடல்களுக்கு மேல் பாடினாய் நானிலம் போற்றும் பாடல்கள் தந்தாய்! அனைத்து இசையமைப்பாளர்களிடமும் பாடினாய் அற்புத இசையமைப்பாளராகவும் இருந்தாய்! ஏவிஎம் ஸ்டூடியோவில் வந்து முதலில் பாடினாய் என்னவோ முதலில் பாடிய பாடல் வெளிவரவில்லை! அதற்குப்பின் பாடிய பாடல்கள் அத்தனையும் சிறப்பு அனைவரும் ரசித்திடும் அற்புதக் குரல்வளம்! குழந்தையின் குரலிலும் பாடல்கள் பாடினாய் கிழவியின் குரலிலும் பாடல்கள் பாடினாய் பாடிய பாடல்கள் பிடித்த பாடல்கள் எதுஎன்றால்? பாடிய அனைத்துமே எனக்கு பிடிக்கும் என்றாய்! பத்தொன்பது வயதிலிருந்து பாடத் தொடங்கினாய்! ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்தேழில் (1957) பாடினாய் அயல்மொழியான ஜப்பான் ஜெர்மனியிலும் பாடினாய்! டி.ராஜேந்தர் பாடகியயாக நடிக்க அழைத்தபோதும் மறுத்துவிட்டு பாடுவதே என் வேலை என்றாய்! ஆண் பாடகர்கள் உன்னோடு பாடிட பயந்தார்கள் அத்தனை ராகமும் உனக்கு அத்துபடி என்பதால்! சவால் மிகுந்த பாடலை சாதாரணமாகப் பாடினாய் சகலரும் ரசித்துப் பாடிடும்வண்ணம் பாடினாய்! உன்னைப் போல ஒரு பாடகி ஒருவரும் இல்லை உனக்கு நிகர் பாடலில் நீ மட்டுமே வேறில்லை! இசைக்குயில் மூச்சை நிறுத்திக் கொண்டாய் இசைஉலகம் உனை இழந்து தவிக்கின்றது! இசைக்குயில் ஜானகிக்கு மறைவே இல்லை! இன்னிசைப் பாடல்களில் ஜானகி வாழ்ந்து வருகிறார்...

கருத்துகள்