பெரியார் பற்றி சொல்கிறார் அறிஞர் அண்ணா!
வாசித்து முடிக்கும் போது மயிர் சிலிர்ப்பு.
"கல்லூரி காணாத கிழவர் ! காளைப்பருவ முதல் கட்டுக்கடங்காத முரடர் ! அரசியல் நோக்கத்துக்கான முறையிலே கட்சி அமைப்பு இருக்கவேண்டு மென்று அறியாத கிளர்ச்சிக்காரர் ! பொதுமக்கள் மனம் புண்படுமே, புண்பட்ட மக்கள் கோபத்தால் தாறுமாறாகப் பேசுவரே, ஏன் வீணாக அவர் களின் ஆத்திரத்தைக் கிளப்பவேண்டும் என்று யூகமாக நடந்துகொள்ள மறுப்பவர் ! யார் யாரைத் தூக்கி விடுகிறாரோ, அவர்களாலேயே தாக்கப்படுபவர் ! கவர்னரைக் காண வேண்டுமே, அதற்கேற்ற கோலம் வேண்டாமோ என்ற யோசனை அற்றவர்! தமிழ் ஆங்கில தினசரிகளின் ஆதரவு இல்லாதவர்! ஆரியமதம், கடவுள் எனும் மூடுமந்திரங்களைச் சாடு வதன் மூலம் கேடுவரும் என்று எச்சரிக்கும் போக்கினரின் இசைக்குக் கட்டுப்பட மறுப்பவர். 'நம் ராமசாமியின் கட்சியிலே தோட்டக்கச்சேரி கிடையாது! முனிசிபல் வரவேற்புகளும், முடுக்கான விளம்பரங்களும் கிடையாது . லண்டன் கிளை கிடையாது , லட்சாதிபதிகளின் பிட்சை ' கிடையாது! சாமான்ய மக்களின், இது அரசியல் இது மதம் என்று பகுத்துப் பார்க்கவும் முடியாத மிக மிகச் சாதாரண மக்களின் கூட்டுறவை மட்டுமே பெற்றவர்! தேர்தலா? வேண்டாம்! பதவியா? கூடாது! துரைமார் தயவா? தூ! அது இனிப்புப் பூச்சுள்ள எட்டி! என்றெல்லாம் கூறுகிறார். சிறைச்சாலை என்ற பேச்சுக் கேட்டால் முகம் மலருகிறது! கிளர்ச்சி என்ற கருத்து இனிக் கிறது, இந்தக் கிழவருக்கு! இவ்வளவு வயதாயிற்று, இவ்வளவு வருஷங்களாகப் பொது வேலை செய்தார். ஒரு சர் பட்டம் பெற்றாரா, ஜினிவா போனாரா, (சர்க்கார் செலவில்!) அமெரிக்கா போனாரா? (அரசாங்கத்தின் செலவில்!) எதைக் கண்டார்? எட்டு முறை சிறைக்கோட்டம் போய்வந்தார். இவர்தா னய்யா ராமசாமிப் பெரியார் "
1947ல்" திராவிட நாட்டின் விடுதலை போர்" என்ற நூலில் அண்ணா எழுதிய வரிகள்.

கருத்துகள்
கருத்துரையிடுக