Rajesh Kumar
பக்கத்து வீட்டில் கட்டுமானப் பணி நடக்கிறது.
மணல் சப்ளையில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டபோது அந்த வீட்டில் இருந்த 10 வயது சிறுமி தன்னுடைய அப்பாவிடம் கேட்ட கேள்வி இது.
"ஏம்பா... கடற்கரை பீச்லதான் ஏகப்பட்ட மணல் இருக்கே. அதை எடுத்து யாரும் வீடு கட்டறது இல்லையே ஏன்? "
அவர் தன் பெண்ணுக்கு ஏதோ பதில் சொல்லி சமாளித்தார் என்றாலும் உண்மை நிலவரம் இதுதான்.
கடல் மணலில் குளோரைடு, சல்பேட் உப்புகள் அதிகம். கட்டுமானத்துக்கு பயன்படுத்தும் மணலில் குளோரைடு 0.06% க்கு மேல் இருக்கக்கூடாது. கடல் மண்ணில் அது அபரிமிதம். அதில் சிமெண்டைக் கலந்து கான்கிரீட் போட்டால், உள்ளிருக்கும் இரும்பு கம்பிகள் வேகமாக துருப்பிடித்து கட்டிடம் பலவீனமாகும். வெளிப்பூச்சு உதிரும். கடல் மண்ணின் சல்பேட் நாளடைவில் கான்கீரிட்டை வெடிக்க வைக்கும்.
இந்தியாவில் கட்டிடம் கட்ட பயன்படும் மணல் சரியாக சோதனை செய்யப்படுவதில்லை.
பெரிய அரசு ப்ராஜெக்ட், மெட்ரோ, பாலங்கள் கட்டும் போது IS கோட் படி மணல் சோதனை கட்டாயம். NABL அங்கீகாரம் பெற்ற லேப்களில் செய்வார்கள். ஆனால் சாதாரண வீடு கட்டும் போது 90% பேர் சோதனை செய்வது இல்லை.செலவு, விழிப்புணர்வு இல்லாதது காரணம்.
சிங்கப்பூரில் BCA Code, மலேசியாவில் CIDB விதிகள் படி கட்டுமான மணலுக்கு தர சான்றிதழ் கட்டாயம்.
Sieve Analysis என்கிற டெஸ்ட் மணலின் துகள் அளவு சரியா இருக்கிறதாவென்று பார்க்க செய்யப்படுகிறது.
வீடு கட்டும் போது M-Sand அல்லது ஆற்று மணல் வாங்கி, ஒரு தடவை லேப் டெஸ்ட் செய்வது நல்லது. கட்டணம ரூ3,000 வரை ரூபாய்தான். ஆனால் லட்சக்கணக்கான செலவை மிச்சப்படுத்தும்.
பி. கு.
கடல் மண்ணில் சிமெண்ட் கலந்து வீடு கட்ட முடிகிற சாத்தியத்தை கடவுள் கொடுத்திருந்தால் இந்நேரம் இந்திய கடற்கரை ஓரங்கள் பொட்டல் காடாக மாறியிருக்கும்

கருத்துகள்
கருத்துரையிடுக