மருத்துவம் கொடுக்கும் மன உளைச்சல்கள்!
ஒருவர் மருத்துவமனைக்குள் நுழையும் தருணத்திலேயே அவருக்கு இயல்பாக ஒரு பதற்றம் உருவாக காரணம் - மருத்துவ உபகரணங்கள், பரிசோதனைகள், ரத்தப் பரிசோதனை, ஸ்கேன், எக்ஸ்ரே போன்றவை.
மேலும் பலரது உடல்நிலை சிக்கல்களை விவரித்த வண்ணம் இருக்கும் மருத்துவ உரையாடல்கள் பலருக்கு மனஅழுத்தத்தை அதிகரிக்கக்கூடும்.
சிலருக்கு ரத்த அழுத்தத்தை அளவிடும் தருணத்தில்கூட பதட்டம் அதிகரித்து, அதன் விளைவாக ரத்த அழுத்தமும் தற்காலிகமாக உயருகிறது.
பல நேரங்களில், ஒரு நோயின் ஆரம்ப நிலையிலேயே அதன் எதிர்கால சிக்கல்கள் குறித்து விரிவாகக் கூறப்படுகிறது. இந்த தகவல்கள் நோயாளியை விழிப்புணர்வுடன் வைத்திருக்க உதவுவதற்காக சொல்லப்பட்டாலும், சிலரின் மனதில் அவை பயமாக பதிந்துவிடுகின்றன. தொடர்ந்து அந்த பயத்தை நினைத்துக்கொண்டே வாழும்போது, மனஅழுத்தம் அதிகரித்து உடலின் இயல்பான செயல்பாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
என்னிடம் உளவியல் சிகிச்சைக்காக வரும் பலரது மனநிலையில் மருத்துவ உளைச்சல்கள் அதிக அளவில் இருப்பதை உணர முடிகிறது. பல வித மருத்துவ பரிசோதனையை முடித்துவிட்டு மருத்துவர் கற்றதை விட அதிக மருத்துவ வார்த்தைகளை பயன்பாட்டுக்கு கொண்டுவந்து ஒவ்வொன்றக்கும் ஒரு அர்த்தத்தை உருவாக்கி அதன்மூலம் பதற்றத்தை உணர்ந்து கொண்டிருப்பார்கள்.
மனதால் மனிதன் பாதிக்கப்படும்போது உடலளவில் பாதிக்கப்படுகிறான் என்று தெரிந்தவுடன் உருவாக்கப்பட்ட ஒரு தனித்துவமான அமைப்புதான் மருத்துவ அமைப்பு. மனித வாழ்க்கை மற்றும் உயிருடன் சம்பந்தப்பட்டதால் அதற்கு என்று உருவான தனித்துவம் மேம்பட்டுவிட்டது.
மனிதனை இயல்பாகவே அடக்கி ஆழ முடியும் என்ற நிலையில் மருத்துவம் தன்தனித்தன்மையை ஆழப்படுத்தி கொண்டது.
மருத்துவத்தின் மையமே பயத்தை உருவாக்கிபார்ப்பது என்ற நிலை நம் தமிழ் சமூகத்தில்.
நான் முதுகலை உளவியல் படித்துகொண்டிருந்த காலம். என் தந்தைக்கு உடல்நிலை மாற்றங்கள் இருந்ததால் அப்பொழுதெல்லாம் மனம்தான் என்று தெரியாது. கோவையில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவர்களுக்கே உரித்தான மொழியில் உடனடி heart operation செய்ய வேண்டும் என்று சொன்னார்கள்.
இப்பொழுதுதான் புரிகிறது, மனிதன் வாழ வேண்டும் என்ற நிலையில் அவனுக்கான ஒரு அமைப்பை உருவாக்கி அதில் மற்றவர்களை சார்ந்தவர்களாக மாற்றுவதே அவர்களின் வெற்றி என்று.
மனம், சிந்தனை, இயற்கை, உடலின் இயல்பான வளர்ச்சி இதைப்பற்றி சொல்லிகொடுக்க யாருமே இல்லாது போனதை நினைக்கும்போது, இனிவரும் தலைமுறையினர் புரிதலோடு செயல்பட வேண்டும் என்பதே என் ஆதங்கம்.
மருத்துவம் மன உளைச்சலை கொடுத்து நம் உயிரை எடுத்து கொள்கிறது.
இயல்பாகவே மனித மூளை ஆபத்தை உணரும்போது மன அழுத்தத்தை உணரும். அதற்குபின் இப்படியாயிருச்சே (depression) என்னாகுமோ (anxiety) தவறு நடக்கும் (fear) என்ற மூன்றுவித மனநிலையில் செயல்பட ஆரம்பிக்கும். இந்த மூன்றுவித செயல்பாட்டிற்கு தகுந்தாற்போல் உடல்நோய்கள் உருவாக ஆரம்பிக்கும்.
Depression - thyroid, diabetes, pcod, etc
Anxiety - abdominal issues, ulcer, gastric, indigestion, etc
Fear - heart issues, kidney problems, etc
மனநிலை மாற்றினால் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்திவிட முடியும். அதையும் தாண்டி மனதின் மூலமும் சிகிச்சை செய்து நோய்களை வெல்ல முடியும்.
Surgery என்று சொல்லும் எதுவுமே உங்களை காப்பாற்ற வந்தது கிடையாது, இவையெல்லாம் மனிதனின் சாதனை. ஒவ்வொன்றையும் உருவாக்குவதுதான் மனித இயல்பு.
நீங்களும் உருவாக்கப் பிறந்தவர்கள். அப்பாவிகளாய் இருந்தால் நீங்கள் மற்றவர்களால் பயன்படுத்தப்படுவீர்கள்.
ஏன் எதற்கு என்ற கேள்விகளை உங்களால் கேட்க முடியாது, சொன்னால் செய்தாக வேண்டும். மருத்துவம் மனிதனுக்கு என்று நீங்கள் நம்பியிருக்கலாம். மனிதனுக்கு இயல்பாக சுரக்கும் ஹார்மோன்களை தடுப்பதே surgery க்குப்பின் நடக்கும் கொடூரம்.
நான் உளவியல் சிகிச்சைக்காக வரும் எத்தனையோ பேரை பார்க்கிறேன். அழகான உடலை அதன் அமைப்பை மருத்துவ உதவியனால் கெடுத்து வைத்திருப்பார்கள். மிகவும் வருத்தமாக இருக்கும். நம் உடல் இயல்பான வலிகளை தாங்கிகொள்ளும். ஆனால் நிறைய மருந்து மாத்திரை எடுத்து பழகிவிட்டால் உடல் உருவாக்கும் வலிகளை உங்களால் தாங்க முடியாது.
நமது மூளை நாம் அடிக்கடி நினைக்கும் எண்ணங்களை ஆழமாகப் பதிவு செய்கிறது. நாம் சிறு வயதில் ஒரு நல்ல வாழ்க்கை, நல்ல வீடு, நல்ல தொழில், வெற்றி போன்ற கனவுகளை மனதில் விதைத்தால், அதற்காக தொடர்ந்து முயற்சி செய்து பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இலக்குகளை அடைகிறோம். அதுபோலவே, பயம், எதிர்மறை எண்ணங்கள் மற்றும் உடல்நலக் கவலைகளையே மனதில் தொடர்ந்து விதைத்தால், அவை நமது உணர்வுகளையும் வாழ்க்கை முறையையும் பாதிக்கக்கூடும்.
இயற்கை கொடுத்திருக்கும் சிந்தனை திறனை மேலும் பயன்படுத்துவோம். இயற்கை நம்மை வாழவே இந்த உலகிற்கு அழைத்துவந்தது. மனிதனின் சிரிப்பை, குழந்தைகளின் விளையாட்டை, கணவன் மனைவிகளின் நெருக்கத்தை, முதியோர்களின் உரையாடல்களை கேட்கவே இயற்கை ஆசைபடுகிறது. மனஅமைதி, சிந்தனைதிறன், உடல் ஆரோக்கியம், பணபலம் அனைத்தும் நமக்கு கிடைக்கும் மனதை புரிந்துகொள்ளும்போது.
மனதை புரிந்துகொள்ள, நோய்களை வெல்ல என்னுடைய பத்துநாள் பயிற்சியில் கலந்து கொள்ளுங்கள்.
https://chat.whatsapp.com/DrOLO4MKUVT0KcCrmD7600?mode=gi_t
Dr. Mehar Nithyan, PhD. Psychology
Director - Calmscious Psychotherapy Clinic
@918838428286

கருத்துகள்
கருத்துரையிடுக