ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! மனிதனுக்கு அழகு மனிதநேயம் ! திருந்தாத மக்கள் தெரிந்தே ஏமாறுகின்றனர் தனியார் நிதிநிறுவனம் வேண்டாம் ஏளனம மானம் காத்தது மாற்றுத்திறனாளி ! இறந்த பின்னும் வாழும் விழிகள் விழி தானம் இடுகாடு வேண்டாம் சுடுகாடு போதும் இடநெருக்கடி! ழியனுப்ப வந்தவர் உடன் பயணித்தார் புறப்பட்டது தொடரி ! அமைதி காக்கவும் கத்திச் சொன்னார் ஆசிரியர் ! மனிதர்களை மட்டுமல்ல கணினிகளை தாக்குகின்றன கிருமிகள் ! மல்லிகைக்கு மட்டுமல்ல மாசற்ற அன்பிற்கும் மதுரை ! பெயரிலேயே திரு உடையவர் திருவள்ளுவர் ! பெயரிலேயே திரு உடையது திருக்குறள் ! ஓரடி ஆத்திசூடி ஈரடி திருக்குறள் மூவடி ஹைக்கூ ! படித்தவர்களும் ரேகை பதித்தனர் அலுவலகம் நுழைகையில்  குறைத்தது வாழ்நாள் நவீன உணவு ! உட்கார்ந்த இடத்தில் ஓடாமல் விளையாடியது கணினியில் குழந்தை ! வயப்பட்டவர்கள் மட்டும் உணரும் உன்னதசுகம் காதல் !பூச்சென்டாக ஒன்று மலர்வளையமாக மற்றொன்று ஒரு செடிப் பூக்கள் ! கடன் வாங்கக் கற்றுத் தருகிறார் கணக்கு ஆசிரியர் ! ஆட்டம் ஆர்ப்பாட்டம் அனைத்தும் அடக்கம் கல்லறை ! தூண்டில் புழு மீன் மனிதன் புழு வாழ்க்கை ஒரு வட்டம் நவீனகாலம் மாணவனைக் கண்டு அச்சத்தில் ஆசிரியர் ! மழை விட்ட பின்னும் சாரல் மரத்திலிருந்து ! தோல்வி வெற்றிக்கான படிக்கட்டு சரி படிக்கட்டு எத்தனை ?மூச்சு இருக்குவரை நினைவில் இருக்கும் முதல் காதல் ! தாமதமானாலும் இறுதியில் வெல்வது அறம் ! பணம் பத்தும் செய்யும் உணர்த்தியது தேர்தல் ! இந்நாட்டு மன்னர்கள் தேர்தல் மறுநாள் சாதாரண குடிமக்கள் ! தண்டனை என்றுஅறிவிப்போம் தமிங்கிலம் பேசினால் ! தமிழ்மொழி பாட்டி வடமொழி பெயர்த்தி பெயர்த்திக்குப் பிறந்தால் பாட்டி என்று பிதற்றுகின்றனர் கோமாளிகள் ! ஒழுக்கம் உணர்த்தும் ஒப்பற்ற வரலாறு சிலப்பதிகாரம் ! ஒரே வரியில் ஒப்பற்ற அறம் ஆத்திசூடி ! அறிந்தது உலகம் அறியவில்லை தமிழர் திருக்குறள் அருமை !

கருத்துகள்